Home
Mobile

தகதகனு மின்னுது.. பெர்ஃபார்மென்ஸ்ல பின்னுது.. Oppo-வின் புதிய 5G போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

2 அட்டகாசமான கலர் ஆப்ஷன்களில், ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக ஒப்போ எஃப்23 5ஜி (OPPO F23 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பெர்ஃபார்மென்ஸ் (Overall Performance) மீது அதிக கவனம் செலுத்தும் இந்த ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

ஒப்போ எஃப்23 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டூயல் சிம் சப்போர்ட் (Dual SIM Support) உடன் வரும் ஒப்போ எஃப்23 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 13.1 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (120Hz Refresh Rate) ஆதரிக்கும் 6.72-இன்ச் புஃல்-எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை (LTPS LCD Display) கொண்டுள்ளது.

Oppo-வின் புதிய 5G போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

இது அட்ரெனோ 619 ஜிபியு மற்றும் 8ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 695 5G SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஒருவேளை இந்த ஒப்போ போனின் செயல்திறனை (Performance) நீங்கள் இன்னும் மேம்படுத்த விரும்பினால், இதன் 8ஜிபி ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் (Auto Focus) மற்றும் எஃப்/1.7 அபெர்க்ஷர் உடனான 64எம்பி மெயின் கேமரா + எஃப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி மோனோ சென்சார் + எஃப்/3.3 அபெர்க்ஷர் உடனான 2எம்பி மைக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) உடன் வரும் ஒப்போ எஃப்23 5ஜி-யில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, 67W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒப்போவின் கூற்றுப்படி, இது 44 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

இந்தியாவில் ஒப்போ எஃப்23 5ஜி-யின் விலை நிர்ணயம் என்ன? ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் (Single Storage Option) கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

போல்ட் கோல்ட் (Bold Gold) மற்றும் கூல் பிளாக் (Cool Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Oppo Website) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளம் வழியாக முன்பதிவு (Pre-order) செய்ய கிடைக்கிறது.

வருகிற மே 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் மீது சில அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,500 தள்ளுபடி, ரூ.23,748 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை (Exchange Offer), ரூ.4,166 முதல் நோ-காஸ்ட் விருப்பங்கள் (No cost EMI Options) போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F23 5G Launched in India Amazon Sale Starts From May 18 Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X