ஒப்போ எஃப்23 5ஜி: இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களில் இருந்து மகுடத்தை எடுக்கும் பேட்டரி பவர்ஹவுஸ்!
ஒப்போ எஃப்23 5ஜி - இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய எஃப் சீரீஸ் ஸ்மார்ட்போனாகும். ஒப்போ எஃப்23 5ஜி-யின் மிகப்பெரிய 5000mAh பேட்டரி, 67W சூப்பர்வூக்டிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64எம்பி ட்ரிபிள்-ஏஐ கேமரா செட்டப், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற அம்சங்கள் இதை ஒரு திறமையான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக மாற்றுகின்றன. இப்படியான ஈர்க்கக்கூடிய புள்ளிவிவரங்கள் ஒருபக்கம் இருக்க, இதன் பேட்டரித்திறனோ பல ஃபிளாக்ஷிப் போன்களை விஞ்சும்படி உள்ளது.
ஒரு பெரிய 5,000mAh பேட்டரியை தவிர்த்து, எஃப்23 5ஜி ஆனது ஒப்போவின் தனியுரிம பேட்டரி ஹெல்த் எஞ்சினை (Battery Health Engine - BHE) பயன்படுத்துகிறது, இது பேட்டரி ஆயுளை நீட்டிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள பிஎச்இ ஆனது பேட்டரி நிலையை கண்காணிக்கிறது மற்றும் சார்ஜிங் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, இது பேட்டரியை 1,600 சார்ஜ் சுழற்சிகளை ஆதரிக்க அனுமதிக்கிறது. இது தொழில்துறை தரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இது மட்டுமின்றி ஒப்போவின் பேட்டரி ஹெல்த் என்ஜின் ஆனது 2023 எஸ்இஏஎல் வணிக நிலைத்தன்மை விருதையும் வென்றுள்ளது! நிறுவனத்தின் உள்நாட்டு பிஎச்இ தொழில்நுட்பத்திற்கான இந்த விருது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்தும் ஒப்போவின் வளர்ந்து வரும் முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை சேர்க்கிறது.
எஃப்23 5ஜி ஆனது பேட்டரி ஆயுளை மேலும் மேம்படுத்த நாள் முழுவதும் ஏஐ பவர் சேவிங்கையும் பயன்படுத்துகிறது. இது ஸ்க்ரீனின் பேக்லைட் மற்றும் சிபியு செயல்திறனை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது பயனரின் உறக்க முறைகளுக்கு ஏற்ப, சூப்பர் நைட்-டைம் ஸ்டேண்ட்பை மோட்-இன் கீழ் வெறும் 2% பவரை மட்டுமே பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் பேட்டரியின் ஒருமைப்பாடு மற்றும் ஆயுட்காலத்தை கணிசமாக மேம்படுத்துகின்றன, நீண்ட காலத்திற்கு சிறந்த பேட்டரி செயல்திறனை வழங்குகின்றன.
சிறந்த பேட்டரி ஆயுளை தவிர, ஒப்போவின் 67W சூப்பர்வூக்டிஎம் சார்ஜிங் தொழில்நுட்பத்திலும் கூட எந்த குறையும் இல்லை. இது ஸ்மார்ட்போனை வெறும் 18 நிமிடங்களில் 50% ஆகவும், 44 நிமிடங்களில் 100% ஆகவும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இது 5 நிமிட சார்ஜில் 2.5 மணிநேர யூட்யூப் வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது. இந்த இடத்தில் ஒப்போவின் 5-அடுக்கு சார்ஜிங் பாதுகாப்பிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். அது தான் மிகவும் பாதுகாப்பான ஃபாஸ்ட் சார்ஜிங்கை உறுதிசெய்கிறது.
இதன் 5-அடுக்கு அமைப்பானது பின்வரும் படிகள் மூலம் முழு சார்ஜிங் செயல்முறையையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.
- அடாப்டர் ஓவர்லோட் பாதுகாப்பு
- ஃபிளாஷ் சார்ஜ் கண்டிஷன் ஐடென்டிஃபிகேஷன் பாதுகாப்பு
- சார்ஜிங் போர்ட் ஓவர்லோட் பாதுகாப்பு
- பேட்டரியின் கரன்ட் / வோல்டேஜ் ஓவர்லோட் பாதுகாப்பு
- பேட்டரி ஃபியூஸ் பாதுகாப்பு
ஒப்போ அதன் தனியுரிம பிஎச்இ தொழில்நுட்பத்துடன் 48 மாத சரளமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது, இது நீண்ட காலத்திற்கு ஒரு மென்மையான அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனானது இந்த பிரிவின் கீழ், சிறந்த பேட்டரி சகிப்புத்தன்மையுடன் திடமான நீடித்த செயல்திறனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 100,000 க்கும் மேற்பட்ட தர சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது, இது நீண்ட சகிப்புத்தன்மை மற்றும் உறுதியான ஆயுளையும் உறுதிப்படுத்துகிறது.
ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.24,999 என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது அமேசான், ஒப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனையாளர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது. ஒப்போ எஃப்23 5ஜி பற்றி மேலும் அறிய கீழ்வரும் சமீபத்திய விளக்கப்படத்தை பார்க்கவும்.



Click it and Unblock the Notifications








