விரைவில் களமிறங்கும் ஒப்போ எப்17 ப்ரோ: என்னென்ன அம்சங்கள்.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஒப்போ நிறுவனம் விரைவில் தனது மெல்லிய ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் இந்த ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 7.48அஅ வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 164கிராம்எடை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்க மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கைகளில்எளிதாக பிடித்து பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று அல்லது நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications