ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500-ஐ நிரந்தரமாக குறைத்துள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.22,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அனைத்து சில்லறை விற்பனையாளர்களிடமும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலானது ரூ.21,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒப்போ இந்தியா வலைத்தளம் ரூ.9350 வரை மதிப்புள்ள பரிவர்த்தனை சலுகை, ஒரு வருடத்திற்கு எளிதான இ.எம்.ஐவிருப்பங்கள் மற்றும் ஒப்போ மேம்படுத்தல் சலுகை போன்ற ஒப்பந்தங்களை வழங்குகிறது. மேலும் அமேசான் தளத்தில் நோ காஸ்ட் இ.எம்.ஐ, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவிகித உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.11,200 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை போன்றஒப்பந்தங்களை வழங்குகிறது.

ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W வூக் ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

குறிப்பாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு 64 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications