ஒப்போ நிறுவனத்தின் தீபாவளி பரிசு இதுதான்: அக்.19-இல் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ F17 ப்ரோ ஸ்மார்ட்போனின் தீபாவளி எடிஷனை வரும் அக்டோபர் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த புதிய லிமிடெட் (வரையறுக்கப்பட்ட) எடிஷன் இந்திய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே வெளியிடப்படும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்17 ப்ரோவுடன்

இதன் சிறப்பம்சங்கள் கடந்த மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வழக்கமான ஒப்போ எஃப்17 ப்ரோவுடன்ஒத்ததாக இருக்கும். இருந்தபோதிலும் பண்டிகை கால எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனின் மேற்புற வண்ணங்களில் சில பெரியமாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

 ஒரு ஊடக அறிக்கையில்

குறிப்பாக தொடர்ந்து பல்வேறு விழாக்கள் வருவதால் இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ எடிஷன் வெளிவருவது நன்றாக இருக்கும் என ஒரு அறிக்கையில் ஒப்போ நிறுவனம் குறிப்பட்டுள்ளது.

 ஒப்போ ரெனோ 4

அதேபோல் கடந்த மாதம் ஐபிஎல் 2020 ஆரம்பிக்கப்பட்ட சிறுது நாட்களிலேயே எம்.எஸ் தோனி பிராண்டிங்கைக் கொண்ட ஒப்போ ரெனோ 4 ப்ரோ Galactic Blue பதிப்பை இந்நிறுவனம் கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ எஃப் 17 ப்ரோ

ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் தீபாவளி ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் விலை மற்றும் விவரங்களை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அசல் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி + 128 ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,990- ஆக உள்ளது.

 ஒப்போ எஃப்17

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் பிளாக், மேஜிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ஒயிட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எஃப் 17 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ எஃப் 17 ப்ரோ அம்சங்கள்

  • 6.43 இன்ச் புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
  • 20: 9 அளவிலான திரை விகிதம்
  • 90.7 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
  • டூயல் சிம் (நானோ) ஆதரவு
  • 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC
  • 8 ஜிபி ரேம்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
  • டூயல் செல்பீ கேமரா அமைப்பு
  • 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
  • 128ஜிபி மெமரி
  • 8ஜிபி ரேம்
  • 4 ஜி வோல்டி,
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • 3.5 மிமீ ஹெட்ஜாக்
  • வைஃபை
  • ப்ளூடூத்
  • 4,000 எம்ஏஎச் பேட்டரி
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • 164 கிராம் எடை.

Best Mobiles in India

English summary
Oppo F17 Pro Diwali Edition Launching in India on October 19: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X