ஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்.! விற்பனை எப்போது?
ஒப்போ நிறுவனம் கடந்த மாதம் அசத்தலான ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. பின்னர் இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றையும் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அது ஒப்போ எஃப் 17 ப்ரோ மாடலின் தீபாவளி எடிஷனாக இருக்கும் என்று அறிவித்திருந்தது.

அந்நிறுவனம் சொன்னபடியே எஃப் 17 ப்ரோவின் ஸ்பெஷல் தீபாவளி எடிஷன் மேட் கோல்ட் வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் ஒப்போ இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் விலை மற்றும் முதல் இந்திய விற்பனை விவரங்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.

அதன்படி ஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் ஆனது ரூ.23,990-க்கு வாங்க கிடைக்கும். மேலும் இதன் முதல் விற்பனை பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான் வழியாக அக்டோபர் 23-ம் தேதி நடக்கும்.

இந்த தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் ஆனது ஒரே மாதிரியான வண்ணத்தினை பெறாமல், மாறாக கோல்ட் வண்ணத்தில் இருந்து அக்வா கிரேடியன்ட் பூச்சை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் நிறத்தை தவிர்த்து ஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W வூக் ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு 64 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் பிளாக், மேஜிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ஒயிட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications