இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.!
இன்று மிகவும் எதிர்பார்த்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் ரூ.19,990-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் லயிட்டிங் ப்ளாக் மற்றும் யூனிகார்ன் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.
புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications