ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
ஒப்போ நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சில பீட்டா சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (ColorOS 11.1) அப்டேட் பெற துவங்கியுள்ளது.

ஒப்போ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஏற்கனவே சில ஓப்போ எப்15 பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். இப்போது ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன், 4ஜிபி/ ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.
ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறத் துவங்கியுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, யூ.எஸ்.பி-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications