அடுத்த வாரம்: புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் அசத்தலான ஒப்போ எப்15.!

|

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது, அப்போது லைட்னிங் பிளாக் மற்றும் யூனிகார்ன் ஒயிட் வண்ண விருப்பங்களில் அறிமுகமானது. தற்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில்
ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் புதிய ப்ளேஸிங் ப்ளூ வண்ண மாறுபாட்டை ஒப்போ நிறுவனம் தனது யூடியூப் சேனலில் ஒரு விளம்பர வீடியோ வழியாக டீஸ் செய்துள்ளது.

ர்ட்போனுக்கு புதிய சாயலைக்

இந்த புதிய வண்ண விருப்பம் ஆனது ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனுக்கு புதிய சாயலைக் கொடுக்குமே தவிர, அம்சங்களில் எந்த
மாற்றமும் இருக்காது, அதாவது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வகைகளைப் போலவே இருக்கும் என்பதை குரோமா பட்டியல
உறுதிப்படுத்தியுள்ளது.

விலையில் அறிமுகம் செய்யப்பட்டது,

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் ரூ.19,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு ஜிஎஸ்டி விகித திருத்தத்திற்குப்
பிறகு ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகரித்து ரூ. 21,990 என்கிற விலையில் விற்பனை செய்துவருகிறது.

இனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன? மத்திய அரசு கேட்ட பட்டியல்!இனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன? மத்திய அரசு கேட்ட பட்டியல்!

குவாட் கேமரா மற்றும்

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும்

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15
ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.

பிரைமரி கேமராவுடன், 8 மெகா

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள்
கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸைகேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மாலி

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன்களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F15 Blazing Blue Colour Variant Teased, May Launch Next Week and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X