Home
Mobile

ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்.!

தனித்துவமான ஸ்மார்ட்போன் வடிவமைப்புகள் மற்றும் ஒரு அசாதாரண செயல்திறன் பற்றி நாம் சிந்திக்கும்போது,​​ எப்போதும் முன்னணியில் இருக்கும் ஒரு பிராண்ட் ஒப்போ ஆகும். குறிப்பாக இந்நிறுவனம் அதன் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் புதுமைகளைக் கொண்டுவருவதில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. தற்சமயம் வெளிவந்துளள இந்த ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி

குறிப்பாக கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி சிறப்பான வசதிளுடன் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது,அதன்படி 48எம்பிஏஐ க்வாட் கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், VOOC ஃப்ளாஷ் சார்ஜ் உள்ளிட்டபல்வேறு சூப்பர் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அல்ட்ரா-மெல்லிய வடிவமைப்பு

அல்ட்ரா-மெல்லிய வடிவமைப்பு

7.9 மிமீ தடிமன் மற்றும் வெறும் 172 கிராம் எடையுள்ள ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது பயனர்களுக்கு தகுந்தகச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 20:9 என்கிற திரைவிகதிம் கொண்டு ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் எல்.ஈ.டி ஒளிரும் விளக்குடன் செங்குத்தாக சீரமைக்கப்படுகின்றனஎனவே புகைப்படம் மற்றும் வீடியோ போன்ற தேவைகளுக்கு அருமையாக பயன்படுத்த முடியும். கேமராவின்
மேற்பரப்பில் உயர்த்தும் அலங்கார வளையம் உள்ளது, இது லென்ஸ்கள் கீறல்களிலிருந்து தடுக்க உதவுகிறது.

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடல் இரண்டு அற்புதமான வண்ணங்களில் கிடைக்றது, அதன்படி லைட்னிங் பிளாக்மற்றும் யூனிகார்ன் வைட் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

4எம்பி க்வாட் கேமரா வசதி

4எம்பி க்வாட் கேமரா வசதி

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் கேமரா 4-இன்-ஒன்-பிக்சல் காம்பினேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையான விவரங்களுக்கு படங்களை சிறந்த விவரங்களுடன் படம் பிடிக்கிறது.

இந்த சாதனத்தில் உள்ள அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ஆனது 119 டிகிரி புல-பார்வையை வழங்குகிறது, இது பனோரமா பயன்முறைக்கு மாறாமல் முழு காட்சியையும் கைப்பற்ற அனுமதிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது மேக்ரோ லென்ஸாகவும் செயல்படுகிறது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும். குறிப்பாக
வெளிப்புறங்களில் புகைப்படம் எடுப்பதற்கு தகுந்தபடி பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா?

ஏஐ அம்சம்

ஏஐ அம்சம்

இந்த சாதனத்தில் உள்ள ஏஐ அம்சத்திற்கு தனி கவனம் செலுத்ப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் ஏஐ வீடியோ அழகுபடுத்தல் அம்சத்திற்காக ஒரு புதிய வழிமுறையைப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு இளைஞர்களுக்கு தகுந்தபடி தான் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

இருட்டில் விரிவான படங்களை கிளிக் செய்ய இந்த சாதனத்தில் நைட் போர்ட்ரெய்ட் பயன்முறை உங்களுக்குஉதவுகிறது. மேலும் இருண்ட வீதிகள், உணவகங்கள் அல்லது பூங்காக்கள் போன்ற இடங்களில் இந்த ஒப்போஎப்15 ஸ்மார்ட்போன் கொண்டு அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக நுஐளு மென்பொருள் மற்றும் கைரோஸ்கோப் வன்பொருள் அடிப்படையில் இந்த சாதனம்தயாரிக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த தொழில்நுட்பங்கள்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவாகவும், கூர்மையாகவும், நிலையானதாகவும் தோன்றும்படி
செய்யும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் இன்-டிஸ்ப்ளே கைரேகை 3.0 சென்சார் சாதனத்தை வெறும் 0.32 வினாடிகளில் திறக்க முடியும் மற்றும் மோசடி எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை மேலும் பாதுகாப்பாக மாற்ற முடியும்.

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனில் உள்ள மற்றொரு சிறந்த தொழில்நுட்பம் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஆகும். VOOCஃப்ளாஷ் சார்ஜ் 3.0 அதிக மின்னழுத்தத்திற்கு பதிலாக அதிக மின்னோட்டத்தில் கவனம் செலுத்துகிறது மற்றும்
தொலைபேசியின் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது, அதாவது இணைப்பு மற்றும் சேமிப்பகத்தில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதில்லை

கேம் பூஸ்ட் 2.0

கேம் பூஸ்ட் 2.0

விளையாட்டாளர்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட கேம் பூஸ்ட் 2.0 தொலைபேசியின் செயல்திறனை தாமதம் மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்களை ஆராய்வதன் மூலம் பகுப்பாய்வு செய்கிறது. அதாவது டச் செயல்பாடு மென்மையான செயல்திறனை வழங்க விகிதங்களை கொண்டுள்ளது. கேம் பூஸ்ட் 2.0 PUBG பிரேம் வீத நிலைத்தன்மையை 55.8% அதிகரிக்கிறது மற்றும் லேக்கின் AOV சாத்தியத்தை17.4% குறைக்கிறது, இது உங்கள் கேமிங் அனுபவத்தை ஒரு விருந்தாக மாற்றுகிறது. மேலும் டச் பூஸ்ட் மற்றும் ஃபிரேம் பூஸ்ட் ஆகியவை மென்மையான கேமிங் அனுபவமுள்ள பயனர்களுக்கு உதவுகின்றன.

தெளிவான டிஸ்பிளே வசதி

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.கேமிங் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றில் சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.

குறிப்பாக 2400 x 1080 திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, இந்த சாதனம்,மேலும் சிறந்த பாதுகாப்புஅம்சம் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.இது பயனர்கள் மிருதுவான முழு எச்டி தெளிவுத்திறனில் யூடியூப், நெட்ஃபிக்ஸ் அல்லது அமேசான் பிரைம் வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கிறது. TÜV ரைன்லாண்டின் கண் பாதுகாப்பு சான்றிதழ், குறைந்த வெளிச்சத்தில் ஸ்ட்ரோபோஸ்கோபிக் (ஸ்கிரீன் ஃப்ளிக்கர்) ஐக் குறைக்கிறது, இது கண் சோர்வில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

கலர்ஓஎஸ் 6

கலர்ஓஎஸ் 6

இந்த ஸ்மார்ட்போனில் கலர்ஓஎஸ் 6.1.2 என்பது ஸ்மார்ட்போனின் இதயமும் ஆன்மாவும் அமைந்துள்ளது. புதிய பயனர் இடைமுகம் பெரிய வண்ணத் தொகுதிகளை ஒளி நேர்த்தியான சாய்வுகளுடன் மாற்றுவதன் மூலம் அற்புதமான AMOLED திரையை நிறைவு செய்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாகஇந்தஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் உள்ள ஸ்மார்ட் அசிஸ்டென்ட் வசதி கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் ஸ்மார்ட் அசிஸ்டென்ட் திரை விரைவான செயல்பாடுகள், ஸ்மார்ட் சேவைகள் மற்றும் பிடித்த சேவைகளையும் வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகள்

ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகள்

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜனவரி 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது ஆன்லைன்தளங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சாதனத்திற்கு பல அற்புதமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு ஃ டெபிட் கார்டு மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உடன் கிடைக்கும் ஜீரோ டவுன் பேமென்ட் விருப்பங்கள் மூலம் வாங்கும் ஈ.எம்.ஐ சலுகைகளில் 5% கேஷ்பேக் உள்ளது. கூடுதலாக, எச்.டி.எஃப்.சியில் இருந்து 10% கேஷ்பேக் கிடைக்கிறது

இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது, இந்த சலுகைகள்
அனைத்தும் ஜனவரி 15-ம் தேதி வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒப்போ எப்15
ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்குள் வாங்க கிடைக்கும் அருமையான ஸ்மார்ட்போன் ஆகும்.

Best Mobiles in India

English summary
OPPO F15: A brilliantly designed Smartphone Under Rs. 20,000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X