4ஜிபி ரேம் உடன் ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!
இந்தியாவில் ஒப்போ நிறுவனம் ஏற்கனவே 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், இன்று மீண்டும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொணட ஒப்போ எப்15 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொணட ஒப்போ எப்15 மாடல் ரூ.16,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ எப்15 இன் சமீபத்திய வேரியண்டின் அறிமுகத்தை மகேஷ் டெலிகாம்
ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் லயிட்டிங் ப்ளாக் மற்றும் யூனிகார்ன் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 4ஜிபி/ ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.

புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
வழங்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications