48எம்பி ரியர் கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் பொதுவாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது
இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்11 மற்றும் ஒப்போ எப்11 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன்களில் கேமரா பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பாப் அப் செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தன்டர் பிளாக் மற்றும் அரோரா கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் பொதுவாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ எப்11 அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.5-இன்ச முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்.எம் சிப்செட்
உடன் 900மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி உள்ளது
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ் 6.0
ஹைப்ரிட் டூயல் சிம்
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி இரண்டாவது பிரைமரி லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4020எம்ஏஎச்
வைபை, ப்ளூடூத், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 3.5எம்.எம் ஆடியோ
கைரேகை சென்சார்

ஒப்போ எப்11 ப்ரோ அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080ஒ1080 பிக்சல்)
பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்.எம் சிப்செட்
உடன் 900மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி உள்ளது
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ் 6.0
ஹைப்ரிட் டூயல் சிம்
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி இரண்டாவது பிரைமரி லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4020எம்ஏஎச்
வைபை, ப்ளூடூத், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,3.5எம்.எம் ஆடியோ
கைரேகை சென்சார்

ஒப்போ எப்11 ப்ரோ-விலை:
ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990-ஆக உள்ளது, பின்பு வரும் மார்ச் 15-ம் தேதி முதல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

ஒப்போ எப்11-விலை:
ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் ரூ.19,990-விலையில் விற்பனைக்கு வரும், பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ மற்றும்
ஏர்டெல் நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications