புதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தற்சமயம் சாம்பல் நிறத்தில் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இதற்குமுன்பு கருப்பு, பசுமை போன்ற நிறங்களில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ட்ரா எச்.டி கேமரா:
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை, 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது. 48 மெகா பிக்சல் கேமரா சேவை நிச்சயம் ஒரு புதிய புரட்சியை ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஸ்மார்ட்போன் இல் உள்ள பின்பக்க கேமரா எல்.இ.டி யுடன் பின்பக்கம் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.
நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் மிக துல்லியமான ஆழமான விபரங்களுடன் தெளிவானான் போட்டோ அனுபவத்தை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ அல்ட்ரா கிளியர் என்ஜின்
ஏ.ஐ அல்ட்ரா கிளியர் என்ஜின் தொழிநுட்பத்துடன் கூடிய 48 மெகா பிக்சல் கேமரா சேவையினை பயன்படுத்தி இருட்டில் கூட உங்களால் சிறந்த புகைப்படத்தை கிளிக் செய்ய முடியும். ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது. இந்த கேமரா சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி எப்11 ஸ்மார்ட்போன் வெளிச்சம் குறைந்த இடத்திலும், இருள் சூழ்ந்த இடத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு புதிதாய் அல்ட்ரா
நைட் மோடு என்ற ஒரு சேவை மோடை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இருட்டில் சிறந்த போட்டோ அனுபவத்தை வழங்குவதற்காவே இந்த அல்ட்ரா நைட் மோடு சேவை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பனோராமிக் ஸ்கிரீன்
பனோராமிக் ஸ்கிரீன் என்று அழைக்கும் முழு ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட புது டீஸரையும் ஒப்போ நிறுவனம் அண்மையில் வெளியிட்டு, தனது வாடிக்கையாளர் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தை போட்டியாளர்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது.

48 மெகா பிக்சல்:
ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் இல் ஒப்போ நிறுவனம் புதிய 48 மெகா பிக்சல் முன்பக்க ரைசிங் கேமராவை பொருந்தியுள்ளது. செல்பி பிரியர்களுக்கு அட்டகாசமான சிறந்த சேவையை வழங்க இந்த ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சிங்கள் கிளிக் செல்ஃபீ பட்டனை கிளிக் செய்தவுடன் ஒப்போ எப்11 ப்ரோ இன் ரைசிங் கேமரா போன் இன் முன்பக்கத்தின் உள்ளிருந்து தோன்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ எப்11 ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள 48 மெகா பிக்சல் கேமரா சிறந்த செல்பி அனுபவத்தை வழங்குகிறது.

அட்டகாசமான வடிவமைப்பு:
ஒப்போ போன்களின் வடிவமைப்பு எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒருபடி மேல் தான் இருந்துள்ளது. ஒப்போவின் முந்தய ஸ்மார்ட்போன்களை போல் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனும் முதல் பார்வையிலேயே உங்களின் மனதை கொள்ளைகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதன் முதலில் நானோ பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுதிவுள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு. ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெட்டல் கிளாஸ் டிசைன் உடன் கூடிய வளைந்த தோற்றம் உங்கள் கைக்கும் சுகமான அனுபவத்தை தருகின்றது.

ஃபிளாஷ் சார்ஜ்
ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம், ஒப்போ பைண்ட் எக்ஸ் மற்றும் ஒப்போ ஆர்17 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களின் மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஸ்மார்ட்போன் சந்தையில் உருவாக்கியது.


Click it and Unblock the Notifications