ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.!

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை, 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்யவுள்ளது.

|

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம், ஒப்போ பைண்ட் எக்ஸ் மற்றும் ஒப்போ ஆர்17 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களின் மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஸ்மார்ட்போன் சந்தையில் உருவாக்கியது.

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.!

அதுமட்டுமின்றி இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்க திட்டமிட்டு இன்னும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களை களமிறக்க தயாராகிவிட்டது.

48 மெகா பிக்சல் அல்ட்ரா எச்.டி கேமரா:

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை, 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்யவுள்ளது. 48 மெகா பிக்சல் கேமரா சேவை நிச்சயம் ஒரு புதிய புரட்சியை ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஸ்மார்ட்போன் இல் உள்ள பின்பக்க கேமரா எல்.இ.டி யுடன் பின்பக்கம் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் மிக துல்லியமான ஆழமான விபரங்களுடன் தெளிவானான் போட்டோ அனுபவத்தை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் நைட் மோடு:

சூப்பர் நைட் மோடு:

ஏ.ஐ அல்ட்ரா கிளியர் என்ஜின் தொழிநுட்பத்துடன் கூடிய 48 மெகா பிக்சல் கேமரா சேவையினை பயன்படுத்தி இருட்டில் கூட உங்களால் சிறந்த புகைப்படத்தை கிளிக் செய்ய முடியும். ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது. இந்த கேமரா சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் வெளிச்சம் குறைந்த இடத்திலும், இருள் சூழ்ந்த இடத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு புதிதாய் அல்ட்ரா நைட் மோடு என்ற ஒரு சேவை மோடை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இருட்டில் சிறந்த போட்டோ அனுபவத்தை வழங்குவதற்காவே இந்த அல்ட்ரா நைட் மோடு சேவை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரைசிங் கேமரா:

ரைசிங் கேமரா:

ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் இல் ஒப்போ நிறுவனம் புதிய 48 மெகா பிக்சல் முன்பக்க ரைசிங் கேமராவை பொருந்தியுள்ளது. செல்பி பிரியர்களுக்கு அட்டகாசமான சிறந்த சேவையை வழங்க இந்த ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சிங்கள் கிளிக் செலஃபீ பட்டனை கிளிக் செய்தவுடன் ஒப்போ எப்11 ப்ரோ இன் ரைசிங் கேமரா போன் இன் முன்பக்கத்தின் உள்ளிருந்து தோன்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ எப்11 ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள 48 மெகா பிக்சல் கேமரா சிறந்த செல்பி அனுபவத்தை வழங்குகிறது.

முழு ஸ்கிரீன் டிஸ்பிளே:

பனோராமிக் ஸ்கிரீன் என்று அழைக்கும் முழு ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட புது டீஸரையும் ஒப்போ நிறுவனம் அண்மையில் வெளியிட்டு, தனது வாடிக்கையாளர் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தை போட்டியாளர்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது.

நாட்ச் இல்லாத முழு ஸ்கிரீன் டிஸ்பிளே

நாட்ச் இல்லாத முழு ஸ்கிரீன் டிஸ்பிளே

நாட்ச் இல்லாத முழு ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் ஒப்போ எப்11 ப்ரோ களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான வடிவமைப்பு:

அட்டகாசமான வடிவமைப்பு:

ஒப்போ போன்களின் வடிவமைப்பு எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒருபடி மேல் தான் இருந்துள்ளது. ஒப்போவின் முந்தய ஸ்மார்ட்போன்களை போல் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனும் முதல் பார்வையிலேயே உங்களின் மனதை கொள்ளைகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதன் முதலில் நானோ பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுதிவுள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு. ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெட்டல் கிளாஸ் டிசைன் உடன் கூடிய வளைந்த தோற்றம் உங்கள் கைக்கும் சுகமான அனுபவத்தை தருகின்றது.

ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக் மற்றும் அரோரா கிறீன் வண்ணத்தில் விற்பனைக்கு வருகின்றது. ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகைக்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில், இன்னும் சில தினங்களே என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OPPO F11 Pro Smartphone that will redefine innovation and flagship performance : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X