ஒப்போ இந்த மாடல் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

|

ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர் ஓஎஸ் 6 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒப்போ ஸ்மார்ட்போன்களின் வரிசையில் அடுத்த சாதனம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 11-ஐப் பெறுகிறது.

கலர் ஓஎஸ் அப்டேட்

கலர் ஓஎஸ் அப்டேட்

கலர் ஓஎஸ் குளோபல் டுவிட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட்டின்படி, ஒப்போ எஃப் 11 ப்ரோ தற்போது இந்தியாவின் நிலையான ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெறுகிறது. இதன் மூலம் கிடைக்கப்படும் புதிய அம்சங்களாநது பெரும்பாலும் முந்தைய கலர் ஓஎஸ் 11 மூலம் பெறப்பட்ட சாதனங்களுக்கு கிடைத்தது போன்றே கிடைக்கும். இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

பயனர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

பயனர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

இந்த புதுப்பிப்பு பெற்ற ஒறு பயனர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்டின்படி., ஒப்போ எஃப் 11 ப்ரோவில் கிடைக்கும் கலர் ஓஎஸ் 11 புதுப்பிப்பு 2.81 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த புதுப்பிப்பை பெறும் பயனர்கள் நல்ல வைஃபை இணைப்பு உள்ள பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த புதுப்பிப்புக்கான நோட்டிபிகேஷன் பெறவில்லை என்றால் செட்டிங்ஸ் பயன்பாட்டுக்கு சென்று சாஃப்ட்வேர் புதுப்பிப்பை சரிபார்க்கலாம்.

ஒப்போ எஃப் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒப்போ எஃப் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்

பனோராமிக் ஸ்கிரீன் என்று அழைக்கும் முழு ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. செல்பி பிரியர்களுக்கு அட்டகாசமான சிறந்த சேவையை வழங்க இந்த ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சிங்கள் கிளிக் செல்ஃபீ பட்டனை கிளிக் செய்தவுடன் ஒப்போ எப்11 ப்ரோ இன் ரைசிங் கேமரா போன் இன் முன்பக்கத்தின் உள்ளிருந்து தோன்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

4000 எம்ஏஹச் பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

4000 எம்ஏஹச் பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டது. இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹச் பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. ஆக்டோகோர் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 சிபியூக்கள் உடன் வரும் எனவும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 48 எம்பி இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இது VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F11 Pro Smartphone Gets ColorOS 11 Based Android 11 Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X