விரைவில்: ஒப்போ எப்11 ப்ரோ அவெஞ்சர் எடிஷன் அறிமுகம்!
ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெட்டல் கிளாஸ் டிசைன் உடன் கூடிய வளைந்த தோற்றம் உங்கள் கைக்கும் சுகமான அனுபவத்தை தருகின்றது.
கடந்த மாதம் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது வெளிவந்த அறிவிப்பு என்னவென்றால் ஒப்போ எப்11 ப்ரோ அவெஞ்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 24-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

மேலும் ஒப்போ எப்11 ப்ரோ அவெஞ்சர் எடிஷன் நீலம் மற்றும் சிவப்பு நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது, குறிப்பாக 128ஜிபி மெமரியுடன் இந்த அவெஞ்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பனோராமிக் ஸ்கிரீன்
பனோராமிக் ஸ்கிரீன் என்று அழைக்கும் முழு ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட புது டீஸரையும் ஒப்போ நிறுவனம் அண்மையில் வெளியிட்டு, தனது வாடிக்கையாளர் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தை போட்டியாளர்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது.

48 மெகா பிக்சல்:
ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் இல் ஒப்போ நிறுவனம் புதிய 48 மெகா பிக்சல் முன்பக்க ரைசிங் கேமராவை பொருந்தியுள்ளது. செல்பி பிரியர்களுக்கு அட்டகாசமான சிறந்த சேவையை வழங்க இந்த ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சிங்கள் கிளிக் செல்ஃபீ பட்டனை கிளிக் செய்தவுடன் ஒப்போ எப்11 ப்ரோ இன் ரைசிங் கேமரா போன் இன் முன்பக்கத்தின் உள்ளிருந்து தோன்றும் படி
வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ எப்11 ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள 48 மெகா பிக்சல் கேமரா சிறந்த செல்பி அனுபவத்தை வழங்குகிறது.

அட்டகாசமான வடிவமைப்பு:
ஒப்போ போன்களின் வடிவமைப்பு எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒருபடி மேல் தான் இருந்துள்ளது. ஒப்போவின் முந்தய ஸ்மார்ட்போன்களை போல் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனும் முதல் பார்வையிலேயே உங்களின் மனதை கொள்ளைகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதன் முதலில் நானோ பிரின்டிங் தொழில்நுட்பத்தை
பயன்படுதிவுள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு. ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெட்டல் கிளாஸ் டிசைன் உடன் கூடிய வளைந்த தோற்றம் உங்கள் கைக்கும் சுகமான அனுபவத்தை தருகின்றது.

ஃபிளாஷ் சார்ஜ்
ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம், ஒப்போ பைண்ட் எக்ஸ் மற்றும் ஒப்போ ஆர்17 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களின் மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஸ்மார்ட்போன்
சந்தையில் உருவாக்கியது.


Click it and Unblock the Notifications