Home
Mobile

தட்டி தூக்குற நேரமிது.. OPPO Diwali 2024 ஆபர்.. 8 போன்கள் மீது அமோக டிஸ்கவுண்ட்.. அதுவும் நவ.7 வரை!

நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகியவைகளை உள்ளடக்கிய இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் பல ஸ்மார்ட்போன்களின் மீது சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. சுவாரசியமாக இந்த விற்பனையின் கீழ் ஒப்போ ரெனோ 12 சீரீஸ் (Oppo Reno 12 Series) மற்றும் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo F27 Pro Plus 5G) உள்ளிட்ட மாடல்களின் மீதும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? வேறு என்னென்ன ஒப்போ போன்கள் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது? ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.53,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஒப்போ ரெனோ 12 5ஜி (Oppo Reno 12 5G) ஸ்மார்ட்போன் ரூ.43,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கும்.

OPPO Diwali 2024 ஆபர்.. 8 போன்கள் மீது அமோக டிஸ்கவுண்ட்!

ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி (Oppo F27 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் ரூ.32,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும். சற்றே பழைய ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி (Oppo Reno 11 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.44,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி (Oppo F25 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.28,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும். ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி (Oppo A3 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

மேற்கண்ட விலைகள் பேங்க் டிஸ்கவுண்ட், ஸ்டூடெண்ட் பெனிஃபிட் உள்ளிட்ட வெவ்வேறு வகையான தள்ளுபடிகளுக்கு பின்னரான விலைகள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஒப்போவின் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களின் மீது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

மேலும், ஆஃபர் காலத்தில் பர்ச்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்கள், ஒப்போ பைண்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) மற்றும் பிற ஒப்போ தயாரிப்புகளை வெல்வதற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள். ஏற்கனவே நேரலையில் உள்ள இந்த விற்பனை அடுத்த மாதம் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் "பே 0, வொர்ரி 0 வின் ரூ.10 லட்சம்" என்கிற புதிய ஆபரையும் அறிவித்துள்ளது. இதில் நோ-காஸ்ட் இஎம்ஐ-க்கள், பூஜ்ஜிய முன்பணம், பூஜ்ஜிய செயலாக்க கட்டணம் மற்றும் தகுதியான ஒப்போ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி கேஷ்பேக் ஆகிய சலுகைகளும் அடங்கும்.

ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) மற்றும் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட பிரபலமான மாடல்களின் மீது 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ திட்டங்கள் கிடைக்கிறது. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்டிபி ஃபைனான்ஸ், டிவிஎஸ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் பேங்க் போன்ற வங்கிகளிடம் இருந்து 6முதல் 9 மாத கால அவகாசத்திற்கு ஜீரோ ப்ராசசிங் கட்டணத் திட்டங்கலும அணுக கிடைக்கிறது.

ஜீரோ டவுன் பேமெண்ட் திட்டங்களை பொறுத்தவரை 11 அல்லது 12 மாதங்கள் வரை தேர்வு செய்யலாம். இந்த எல்லா சலுகைகளுமே - நவம்பர் 5 ஆம் தேதி வரை ஒப்போ நிறுவனத்தின் இந்திய ரீடெய்ல் ஸ்டோர்கள், ஒப்போ இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக ஒப்போ ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Diwali 2024 Sale Special Discounts Reno 12 Series and More Till November 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X