ஆகஸ்ட் 15: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ எப்9 அறிமுகம்.!
ஒப்போ எப்9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஒப்போ எப்9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஒப்போ எப்9 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்ப பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸமார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ட் 15
ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்ஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும், அதன்பின்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஒப்போ எ9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications