வெறும் ரூ.99 க்கு கிடைக்கும் OPPO Privilege Pack.. உள்ளே என்னென்ன இருக்கும்? எந்த போனுக்கானது?
ஒப்போ (OPPO) நிறுவனமானது இந்தியாவில் வெறும் ரூ.99 க்கு ப்ரிவிலேஜ் பேக்கை (Privilege Pack) விற்பனை செய்ய தொடங்கி உள்ளது. ஒப்போ ப்ரிவிலேஜ் பேக் என்றால் என்ன? இந்த ப்ரிவிலேஜ் பேக்கிற்குள் என்னென்ன இருக்கும்? இது எந்தெந்த ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கானது?
ஒப்போ நிறுவனம் ஆனது கூடிய விரைவில் அதன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே சீனாவிலும், நேற்று உலகளவிலும் அறிமுகமான இந்த சீரீஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அடுத்தது இந்திய அறிமுகம் தான் (தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை).

இதற்கிடையில் ஒப்போ நிறுவனம் அதன் புதிய பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரிவிலேஜ் பேக்கை வெறும் ரூ.99 க்கு அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க வரவிருக்கும் பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களுக்கானது. நீங்கள் இப்போதே ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இதை வாங்கலாம்.
உங்களிடம் இந்த கூப்பன் இருந்தால், பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போனை நீங்கள் ஆர்ட்ர் செய்யும் போது, அது ஒரு பிரீமியம் கிஃப்ட் பாக்ஸ் உடன் வரும். அதோடு ஒப்போ சூப்பர்வூக் 80W பவர் அடாப்டருக்கான ( OPPO SUPERVOOC 80W power adapter) கூப்பனும் கிடைக்கும்.
கூடவே மற்றொரு ரூ.1000 தள்ளுபடி எக்ஸ்சேன்ஜ் கூப்பனும் (Rs.1000 off exchange coupon) சேர்க்கப்படும். இதனுடன், பயனர்கள் 2 ஆண்டுகளுக்கு இலவச பேட்டரி பாதுகாப்பு திட்டத்தையும் (battery protection plan) பெறுவார்கள். ரூ.99 க்கு கிடைக்கும் ஒப்போ பிரிவிலேஜ் பேக் ஆனது பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: நேற்று நடந்த உலகளாவிய அறிமுகத்தில், ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,34,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,03,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் ஆனது சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள ஸ்டாண்டர்ட் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடல் ஆனது ஸ்பேஸ் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டு மாடல்களுமே ஒப்போ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக உலகளவில் விற்பனை செய்யப்படும். இந்திய அறிமுகத்திற்கு பின்னரே சரியான இந்திய விலை விவரங்கள் தெரிய வரும்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








