ஒப்போ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்!

|

ஒப்போ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி அடுத்து வரும் காலக்கட்டங்களில் அதநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. தனித்துவ அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஒப்போ நிறுவனம் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 11 அப்டேட்டை நிறுவனம் தொடர்ந்து தனது ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கி வருகிறது. ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ 2 தொடரில் ஒப்போ ரெனோ2, ஒப்போ ரெனோ 2இசட் மற்றும் ஒப்போ ரெனோ 2எஃப் ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை கொண்டு வந்தது.

ஒப்போ ரெனோ 2இசட்

ஒப்போ ரெனோ 2இசட்

அதன்படி ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ 2இசட், ஒப்போ ரெனோ 3ஏ மற்றும் ஒப்போ ஏ91 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11 புதுப்பிப்புகளை பெறுகின்றது. ஒப்போ ரெனோ 2 இசட், ஒப்போ ஏ91 மாடல்கள் இந்தியாவில் புதுப்பிப்பை பெறுகிறது. ஒப்போ நிறுவனம் தனது கலர்ஓஸ் புதுப்பிப்பை அறிவித்த அடுத்த சில நாட்களில் இந்த தகவல் வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11 புதுப்பிப்பின் அதிகாரப்பூர்வ பதிப்பான ஒப்போ ரெனோ 2 இசட் மற்றும் ஒப்போ ஏ91 ஆகிய ஸ்மார்ட்போன்கள் தொகுத அடிப்படையில் வ வெளியிடப்படுகின்றன. செட்டிங்ஸ் அம்சத்திற்கு சென்று சாஃப்ட்வேர் புதுப்பிப்பு தேர்வு செய்து புதுப்பிப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் நிறுவலுக்கு சென்று அப்டேட் செய்யப்படும்.

புதுப்பிப்பு தேதி கிடைக்கும் விவரம்

புதுப்பிப்பு தேதி கிடைக்கும் விவரம்

ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11 புதுப்பிப்பு வெளியீட்டு அட்டவணை குறித்து டுவிட் செய்தது. அதன்படி அடுத்தடுத்து அப்டேட் விவரங்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் ஒப்போ ரெனோ 2 இசட் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் புதுப்பிப்பு கிடைக்கும் எனவும் இந்தியாவில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் புதுப்பிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

  • ஒப்போ ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் அமோலெட் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ பி90 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு உடன் வருகிறது. இதில் 48எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் முன்புறத்தில் 16எம்பி செல்பி கேமரா இருக்கிறது.
  • ஒப்போ ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர் ஓஎஸ் 6.1 உடன் இயங்குகிறது. மேலும் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி, அதேபோல் இதில் வூக் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Announced its Oppo Reno 2Z Gets Android 11 Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X