மே 21: டூயல் கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ9எக்ஸ்.!
ஒப்போ ஏ9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
வரும் மே 21-ம் தேதி ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9எக்ஸ் சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ எ9எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இப்போது ஒப்போ எ9எக்ஸ் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒப்போ ஏ9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஒப்போ ஏ9எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
ஒப்போ ஏ9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications