Oppo நிறுவனத்திடம் இப்படி ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கவே இல்ல.. என்ன விலை தெரியுமா?
ஒப்போ நிறுவனம் இப்போது சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஒப்போ ஏ97 5ஜி
அதாவது மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ.எனவேதான் இதன் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஒப்போ ஏ97 5ஜி (Oppo A97 5G) எனும் புதிய ஸ்மாரட்போனை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம்
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பரான டிஸ்பிளே
ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் தான் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் 2408 x 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

சிப்செட் எப்படி?
அதாவது கேமிங் பயனர்களுக்கு என்றே ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் கேமரா
இந்த ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது அசத்தலான ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ97 5ஜி. எனவே இதன் உதவியுடன் துல்லயமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி வசதி
புதிய ஒப்போ 97 5ஜி போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம்கேம் விளையாட முடியும். அதேபோல் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
டூயல் சிம், 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிஎன்எஸ்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த ஒப்போ 97 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக 188 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ97 5ஜி விலை?
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போனின் விலை Yuan 2,099 (இந்திய மதிப்பில் ரூ.24,730) ஆக உள்ளது. விரைவில் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications