Home
Mobile

ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியுடன் ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் விலை MYR 1,099 (இந்திய மதிப்பில் ரூ.19,600) ஆகஉள்ளது. மேலும் ரெயின்போ சில்வர் மற்றும் ஸ்டாரி பிளாக் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும்60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் பெரிய டிஸ்பிளே உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 குவால்காம்

இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி மிக வேகமாக செயல்படும் என்றே செயல்படும், குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

புதிய ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 48எம்பி பிரைமரி சென்சார்

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33W VOOC Flash Charge பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நிறுவனம்.

புளூடூத் வி5.0, 3.5எம்எம் ஹெட்போன் போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
அதேபோல் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo A95 With Snapdragon 662 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X