Home
Mobile

ஓஹோ., இப்படி தான் இருக்குமா ஓப்போ ஏ95- தாராளமா வெயிட் பண்ணி வாங்கலாமே!

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் லீக்காகி இருக்கிறது. ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பல விளம்பர படங்கள் மற்றும் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்திருக்கிறது. ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் ப்ரோமோ படங்கள் கசிந்துள்ளது. இது ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனை சுற்றி வெளியான வதந்திகளை உறுதி செய்யும் வகையில் இது இருக்கிறது. புதிதாக கசிந்த ரெண்டர்களின் படி செல்பி கேமராவிற்கு என துளை பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

இரண்டு வண்ண விருப்பங்களோடு இந்த சாதனம் வருகிறது. ஒப்போவின் புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனானது செவ்வக பின்புற கேமரா வடிவமைப்பு, டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இரண்டு வண்ண விருப்பங்கள்

இரண்டு வண்ண விருப்பங்கள்

91மொபைல்ஸ் வரவிருக்கும் ஒப்போ ஏ95-ன் விளம்பர படங்கள் மற்றும் ரெண்டர்களை பகிர்ந்துள்ளது. ஒப்போ ஸ்மார்ட்போன் காட்சியில் துளை பஞ்ச் கட்அவுட்டை கொண்டிருக்கிறது. கசிந்த ரெண்டர்களின்படி ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒளிரும் ஸ்டார் பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போன் பெசல்கள் இல்லாமல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8 மெகாபிக்சல் முதன்மை கேமரா

8 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ஒப்போ ஏ95-ன் பின்புற பேனல் டிரிபிள் கேமரா மாட்யூல் உடன் காணப்படுகிறது. எல்இடி ப்ளாஷ் உடன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. அறிக்கையின்படி, ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டிருக்கும் எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. ரேம் 5ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதியோடு வருகிறது. ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும்.

ஏ-சீரிஸ் ஒப்போ போன்

ஏ-சீரிஸ் ஒப்போ போன்

சமீபத்திய ஏ-சீரிஸ் ஒப்போ போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11.1 அவுட் ஆஃப் பாக்ஸை இயக்க முடியும் என முந்தைய கசிவு தெரிவித்தது. ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனானது பெட்டியில் தொகுக்கப்பட்ட இயர்போன்களுடன் 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக கூறப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போனானது இந்த மாதம் தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் வரும் என கூறப்படுகிறது. முன்னதாக மாடல் எண் CPH2365 உடன் Geekbench தரப்படுத்தல் தளத்தில் ஸ்மார்ட்போன் காணப்பட்டது. ஒப்போவிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத காரணத்தால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 229.99 (இந்திய மதிப்பில் ரூ.20,000)ஆக உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பிளாக் மற்றும் பேர்ல் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்போது இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதி உள்ளது. மேலும் கலர்ஓஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo A95 Promo Image and Specs Leaked Online: 5000 mAh Battery, Android 11 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X