Home
Mobile

பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ955ஜி ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் 5ஜி உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.!

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ95 5ஜி சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,000-ஆக உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட் ஒப்போ ஏ95 5ஜி வேரியண்ட்டின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,000-ஆக
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒப்போ ஏ94 5ஜி சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30W VOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஃபென்டாஸ்டிக் பர்பில்' மற்றும் 'ஃப்ளூயிட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ94 5ஜி சாதனம்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ95 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Oppo A95 5G with 48 Mega Pixel Camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X