வெளியானது ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அமசங்கள்.!
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சாதனத்தின் விலை வெளியிடப்படவில்லை. ஆனால் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியாகி உள்ளது.

அதன்படி ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனின் விலை $299 (இந்திய மதிப்பில் ரூ.21,000) என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் உடன் IMG 9XM-HP8 GPU வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனில் 8GB of LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30W VOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஃபென்டாஸ்டிக் பர்பில்' மற்றும் 'ஃப்ளூயிட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ94 சாதனம்.
4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 172 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications