ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மறறும் விபரங்கள்.!
ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ93எஸ் 5ஜி. மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,990-ஆக உள்ளது. மேலும் சம்மர் நைட் ஸ்டார் ரிவர், Early Summer Light Sea, White Peach Soda நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.
ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி portrait லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடமபெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர கைரேகை சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அசத்தலான சாதனம்.
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை 802.11, புளூடூத் வி 5.1 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ93எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications