5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் இந்தோனேசியா சந்தையில் தனது புதிய ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த
ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ92
ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும்1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி மேக்ரோசென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு பேஸ் அன்லாக வசதிகூட இந்த ஸ்மார்ட்போனில்உள்ளது.

5 ஜி (எஸ்ஏ / என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை, கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications