அட்டகாசமான ஒப்போ ஏ91 மற்றும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
ஒப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ஏ91 மற்றும் ஒப்போ ஏ8 என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலையைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ91 டிஸ்பிளே
ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் அமோல்ட் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது,பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

ஒப்போ ஏ91 சிப்செட்
ஒப்போ ஏ91 எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது.

ஒப்போ ஏ91 கேமரா
ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி அல்ட்ரா வைடுஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ8 டிஸ்பிளே
ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் மீடியாடெக் ஹீலியோபி35 சிப்செட் மற்றும் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 9பை இயங்குதள ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ8 கேமரா
ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4ஜிபி ரேம் மறறும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 4230எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை
ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் விலை 1,999யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,291)ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனின் விலை 1,199யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,291) இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications