புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமான ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் ஆனாது தற்சமயம் வெண்ணிலா Mint நிறத்தில் வெளிவந்துள்ளது. இது இந்நிறுவனம் அறிவித்த மூன்றாவது வண்ண விருப்பமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன் மாடல் 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்டவர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கோட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு சிறந்த காட்சி சேவையை இந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 89% ஸ்கிரீன் தீர்வை பெற்றுள்ளது. இத்துடன் ஒப்போ A9 2020 டிஸ்பிளேயில் 'ப்ளூ ஷீல்டு' சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் கண்கள் பாதிப்படையாமல், இரவு நேரத்திலும் ஸ்மார்ட்போனை தொந்தரவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்டாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 256 ஜிபி வரையில் எஸ்டி கார்டு மூலம் உங்களுடைய ஸ்டோரேஜ் வசதியை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உதவியுடன், உயர்நிலை கிராபிக்ஸ் கேம் மற்றும் பப்ஜி போன்ற முழு எச்.டி கேம்களையும் பயனர்கள் பிரேம் பூஸ்ட் மற்றும் டச் பூஸ்ட் போன்ற சேவைகள் மூலம் எந்த தடையுமின்றி சிறந்த கேமிங் அனுபவத்தை அனுபவிக்கலாம் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு பை 9 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ் 6.0.1(ColorOS) வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அசிஸ்டிங், மியூசிக் பார்ட்டி, ஜெஸ்டர் தளத்திலான நவிகேஷன் மற்றும் சிறந்த சேவைக்காக புதிய வடிவில் புதிய வண்ணத்தில் கலர் ஓஎஸ் 6.0.1 முந்தைய வெர்ஷனில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.16,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications