Home
Mobile

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்! என்ன ஸ்பெஷல்?

ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அண்மையில் ஒப்போ நிறுவனம் பிளாக் ஷீப் ஸ்மார்ட்போனான, ஒப்போ ரெனோ 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிரத்தியேகமான ஷார்க் ஃபின் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்தது.இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒப்போ நிறுவனம் ஒப்போ A9 2020 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை இந்தியச் சந்தையில் இளைஞர்களை குறிவைத்து அறிமுகம் செய்துள்ளது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களில் நிச்சயம், இந்த புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.16,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்களை என்னவென்று பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் தனிச் சிறப்பே, இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள குவாட் கேமரா அம்சம் தான். இதற்கு முன்பு வழங்கப்பட்ட கேமரா சென்சார்களை விட, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமரா சென்சார்களின் கேமராக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடக்கது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்த புதிய ஸ்மார்ட் போனில் குவாட் கேமரா செட்டப் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு 48 மெகாபிக்சல்,12 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட பொட்ரைட் கேமரா என மொத்தம் 4 கேமராக்களும் வரிசையாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக எல்இடி ஃப்ளாஷ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமரா அமைப்புடனும் அல்ட்ரா நைட் மோட் 2.0 கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குறைந்த ஒளி உள்ள இடத்தில் மற்றும் இருட்டில் சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்காக இந்த சேவை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் ஜுமிங், போட்டோ ஃபிளாஷ், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசர், டச் டு ஃபோகஸ் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்த கேமராவை பயன்படுத்தி ஸ்லோ மோஷன் வீடியோக்கள், டைம் லேப்ஸ் வீடியோக்களை பயனர்கள் 4K வீடியோ தரத்தில் வினாடிக்கு 30 பிரேம் என்ற எண்ணிக்கையில் ரெகார்ட் செய்துகொள்ளலாம். அதேபோல் 1080p தரத்தில் ஸ்லோ மோஷன் விடியோவையும் ரெக்கார்டு செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போனைப் பொறுத்த வரை கேமரா, பிராசஸர், அதற்கு அடுத்தபடியாக முக்கியமாக பார்க்கப்படுவது பேட்டரி தான். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால், குறைந்தது 20 மணி நேரம் வரை தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனை பயனர்கள் தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்தப் புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட் போன் மாடல் 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்டவர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கோட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு சிறந்த காட்சி சேவையை இந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 89% ஸ்கிரீன் தீர்வை பெற்றுள்ளது. இத்துடன் ஒப்போ A9 2020 டிஸ்பிளேயில் 'ப்ளூ ஷீல்டு' சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் கண்கள் பாதிப்படையாமல், இரவு நேரத்திலும் ஸ்மார்ட்போனை தொந்தரவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்த புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி கொண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும், 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்டாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 256 ஜிபி வரையில் எஸ்டி கார்டு மூலம் உங்களுடைய ஸ்டோரேஜ் வசதியை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உதவியுடன், உயர்நிலை கிராபிக்ஸ் கேம் மற்றும் பப்ஜி போன்ற முழு எச்.டி கேம்களையும் பயனர்கள் பிரேம் பூஸ்ட் மற்றும் டச் பூஸ்ட் போன்ற சேவைகள் மூலம் எந்த தடையுமின்றி சிறந்த கேமிங் அனுபவத்தை அனுபவிக்கலாம் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

ஆண்ட்ராய்டு பை 9 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ் 6.0.1(ColorOS) வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அசிஸ்டிங், மியூசிக் பார்ட்டி, ஜெஸ்டர் தளத்திலான நவிகேஷன் மற்றும் சிறந்த சேவைக்காக புதிய வடிவில் புதிய வண்ணத்தில் கலர் ஓஎஸ் 6.0.1 முந்தைய வெர்ஷனில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

கண்ணைக் கவரும் வண்ணத்தில் இந்த புதிய ஒப்போ A9 2020 மாடல் ஸ்மார்ட்போன், 3D கிரேடியன்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டு பல வண்ணங்களில் ஒளிரும் படி உருவாக்கப்பட்டுளள்து. புதிய ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பருப்பில் மற்றும் மெரைன் கிரீன் ஓகே இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

OPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்!

இந்த புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன், அமேசான் தளத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் ஒப்போ நிறுவனத்தின் ஆஃப்லைன் ஸ்டோர்களில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஒப்போ நிறுவனம் ஒப்போ A5 2020 என்ற ஸ்மார்ட்போன் மடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்டவர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கோட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 2 மெகா பிக்சல் மோனோ லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்சல் பொட்ரைட் லென்சும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்போ A5 2020 ஸ்மார்ட்போன், டெஸ்லிங் வைட் மற்றும் மிரர் பிளாக் நிறத்தில் வெறும் ரூ.13,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தலத்தில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

Best Mobiles in India

English summary
OPPO A9 2020: Best Mainstream Mid-Range Smartphone In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X