நாம் அனைவருமே செல்பீகள் எடுக்க பேரார்வம் கொண்டவர்கள் என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக சமூக வலைப்பின்னல் தளங்களில் மிகவும்
பைத்தியகாரத்தனமான மற்றும் சுவாரஸ்யமான தருணங்களை ஒரு செல்பீயின் வழியே உலகளாவிய வண்ணம் பதிவிடும் நமக்கு அதிக அளவிலான மெகா பிக்சல்கள் கொண்ட செல்பீ கேமரா மீது தனி ஆர்வம் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
செல்பீ கேமரா மன்னன் எனப்படும் ஒபோ நிறுவனம் தற்போது அதன் புதிய ஓப்போ ஏ85 ஸமார்ட்போன் மாடலை கூடியவிரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் டிஎப்டி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1440 x 720)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இடம்பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்டு 7.1.1:
ஓப்போ ஏ85 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ
கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
3090எம்ஏஎச்:
ஓப்போ ஏ85 ஸ்மார்ட்போனில் 3090எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.