5.7-இன்ச் டிஸ்பிளே & 4ஜிபி ரேம் உடன் ஓப்போ ஏ83 அறிமுகம்.!
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஓப்போ நிறுவனம் தற்சமயம் ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்குமுன்பு ஓப்போ ஏ5, ஏ5எஸ், ஏ79 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
கருப்பு மற்றும் சாம்பெய்ன் தங்கம் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஏ83 ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு இந்திய மொபைலட சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன்.

ஓப்போ ஏ83 :
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 :
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா :
இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

3180எம்ஏஎச்:
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,500-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications