இந்திய விற்பனை: ரூ.13.990/-க்கு ஒப்போ ஏ 83; எப்போது முதல்.?

இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களை இன்னும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட ஒப்போ ஏ83 ஆனது இந்தியாவில் ரூ.13.990/-க்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.

|

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ, இன்று (செவ்வாயன்று) அதன் மிட்ரேன்ஜ ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ83-ஐ வருகிற ஜனவரி 20, சனிக்கிழமை அன்று இந்தியாவில் வெளியிடப்படும் என்படகாய் ட்விட்டர் வழியாக அறிவித்துள்ளது.

இந்திய விற்பனை: ரூ.13.990/-க்கு ஒப்போ ஏ 83; எப்போது முதல்.?

ஒப்போ ஏ83 ஆனது 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற பிராதன அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களை இன்னும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட ஒப்போ ஏ83 ஆனது இந்தியாவில் ரூ.13.990/-க்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

இந்த விலைப்புள்ளியானது சியோமி மி ஏ1, ஹானர் 7எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இக்கருவி சீனாவில் இரண்டு வண்ண மாறுபாடுகளில் - பிளாக் மற்றும் சாம்பெயின் - அறிமுகப்படுத்தப்பட்டது.

சேமிப்பு

சேமிப்பு

ஒப்போ மொபைல் இந்தியாவால் வெளியிடப்பட்ட ட்வீட் ஆனது ஒப்போ ஏ83-யின் ஷாம்பெயின் மாறுபாட்டைக் காட்டுகிறது. ஆக இந்தியாவில் இரண்டு வண்ண மாறுபாடுகளுமே வாங்க கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஒப்போ ஏ83 ஒரு 5.7 அங்குல முழு எச்டி + (720x1440 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே (18: 9 விகித விகிதத்துடன்) கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
பேட்டரி

பேட்டரி

2.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6763டி உடனான ஆக்டாகோர்- ப்ராசஸர் கொண்டு இயங்கும் இக்கருவியின் சீன பதிப்பு 4ஜிபி ரேம் கொண்டிருக்க இந்திய பதிப்பானது 3 ஜிபி ரேம் கொண்டுவருகிறது. பேட்டரி திறனிலும் இதுபோன்ற மாற்றத்தை கொண்டுள்ளது. சீனாவில் தொடங்கப்பட்ட மாதிரி 3090எம்ஏஎச் கொண்டிருக்க இந்திய மாதிரியில் 3180எம்ஏஎச் பேட்டரி இடம்பெறுகிறது.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில் எல்எல் ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 4ஜி, ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக், ஒரு மைக்ரோ- யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 4.2, மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பம்

முக அங்கீகார தொழில்நுட்பம்

முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில், ஒப்போ ஏ83 ஆனது பயனரின் முகத்தில் 128 தனிப்பட்ட அம்சங்களை பதிவு செய்து அதை பயன்படுத்தி 0.18 விநாடிகளில் தொலைபேசி திறக்க உதவுமென்றும், இது முற்றிலுமோரு புதிய முக அங்கீகார தொழில்நுட்பமாக செயல்படுமென்றும் ஒப்போ நிறுவனம் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo A83 With 3GB of RAM Launching in India on Saturday, Price Will Be Rs. 13,990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X