டிச.30-ல் அறிமுகமாகும் ஒப்போ ஏ 83 (அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்).!
சுவாரசியமாக டிஇஎன்ஏஏ தளத்தில் காணப்பட்ட பட்டியலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களும் இன்று கசிந்துள்ள லீக்ஸ் தகவலில் கூறப்பட்டுள்ள அம்சங்களும் ஒற்றுப்போகின்றன.
தொடர்ச்சியான முறையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒப்போ நிறுவனத்தின் அடுத்த வெளியீடானது ஒப்போ ஏ83 என்பது வெளிப்பட்டுள்ளது. கூறப்படும் கருவியின் அம்சங்கள் மற்றும் விலையு நிர்ணயம் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது, வருகிற டிசம்பர் 30-ஆம் தேதியன்று துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நினைவு கூறும் வண்ணம், இதே ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போன் ஆனது, டிஇஎன்ஏ தரச்சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டது. சுவாரசியமாக டிஇஎன்ஏஏ தளத்தில் காணப்பட்ட பட்டியலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களும் இன்று கசிந்துள்ள லீக்ஸ் தகவலில் கூறப்பட்டுள்ள அம்சங்களும் ஒற்றுப்போகின்றன.

பின்புறம் மற்றும் முன்பக்கம்
வெளியான லீக்ஸ் புகைப்படத்தில், ஒப்போ ஏ83-ன் பின்புறம் மற்றும் முன்பக்கம் காட்சிப்படுகிறது. அது சாதனத்தின் முழு வடிவமைப்பையும் காட்டுகிறது. படத்தின்படி சென்றால், இந்த ஸ்மார்ட்போன் ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பை கொண்டிருக்கும்.

எந்த கைரேகை ஸ்கேனரும் இடம்பெறவில்லை
படத்தில் காணப்படும் ஸ்மார்ட்போனின் பின்புல பலகத்தில் எந்த கைரேகை ஸ்கேனரும் இடம்பெறவில்லை. இருப்பினும் எல்இடி ப்ளாஷ் மற்றும் பின்புறம் லோகோவுடன் கூடிய பின்புற கேமரா இடம்பெறுகிறது.

மைக்ரோ யூஎஸ்பி போர்ட்
சாதனத்தின் வலது பக்கத்தில் பவர் பொத்தான் மற்றும் வால்யூம் கட்டுப்பாடு பொத்தான் உள்ளன. ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனின் கீழ் விளிம்பில் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பீக்கர் கிரில் உள்ளது.

5.7 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
ஸ்லாஷ்லீக்ஸ் கூறும் ஒப்போ ஏ83 அம்சங்களை பொறுத்தமட்டில், 5.7 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே (720 × 1440பி) கொண்டிருக்கும். உடன் மீடியா டெக் எம்டி6763டி உடனான 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படும்.

3090எம்ஏஎச் பேட்டரி
இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க இணைந்திருக்கும். ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தில் இயக்கப்படும் இக்கருவி ஒரு 3090எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். கேமரத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும்.

விலை நிர்ண்யம்
மேலும், இந்த கைபேசியானது அளவீட்டில், 150.5 x 73.1 x 7.7 மிமீ பரிமாணத்தை கொண்டுள்ளது மற்றும் 143 கிராம் எடையைக் கொண்டுள்ளது. விலை நிர்ண்யத்தை பொறுத்தமட்டில், ஒப்போ ஏ83 ஆனது சுமார் 1199 யுவான்கள் என்ற புள்ளியை எட்டலாம்.


Click it and Unblock the Notifications