13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஏ83.!
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஓப்போ நிறுவனம் அடுத்து ஓப்போ ஏ83 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொதுவாக கருப்பு மற்றும் தங்கம் போன்ற நிறங்களில் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ஏ83 :
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 :
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஓப்போ ஏ83
ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக்
கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3090எம்ஏஎச்:
ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 3090எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications