Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் 12என்எம் ஹீலியோ பி35 ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ நிறுவனம் தற்சமயம் ஒப்போ ஏ7என் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.15,344-ஆக உள்ளது. மேலும் சாம்பல் மற்றும் பசுமை நிறுத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1520
பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒப்போ ஏ7என் சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

ஒப்போ ஏ7என் சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் 12என்எம் ஹீலியோ பி35 ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்டபோனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A7n launched in China: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X