Home
Mobile

கொத்தா தூக்குவீங்க.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. கம்மி விலையில் வருகிறது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஒப்போ நிறுவனம். இந்நிலையில் ஒப்போ ஏ79 5ஜி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒப்போ நிறுவனம்.

அதாவது ஒப்போ ஏ79 5ஜி (Oppo A79 5G) போன் ஆனது தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன்.

 கம்மி விலையில் வருகிறது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக ஒப்போ ஏ79 5ஜி போனின் மாடல் நம்பர் சிபிஎச்2557 (CPH2557) ஆகும். மேலும் இந்த போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 680 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimnesity 6020 SoC) வசதியுடன் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கலர் ஓஎஸ் 13.1 ( ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

50எம்பி சாம்சங் ஜேஎன்1 பிரைமர சென்சார் ( Samsung JN1 primary sensor) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 கம்மி விலையில் வருகிறது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A79 5G with 50MP camera will be launched soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X