கியூ கட்டி வாங்குவீங்க.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. புதிய ஒப்போ 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ ஏ79 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது ஒப்போ ஏ79 5ஜி (OPPO A79 5G) ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு2400 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 680 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம்(MediaTek Dimnesity 6020 7nm) சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கலர் ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
50எம்பி சாம்சங் ஜேஎன்1 பிரைமர சென்சார் (Samsung JN1 primary sensor) + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant)வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமேசான், பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் ஆகிய தளங்களில் வரும் அக்டோபர் 28-ம் தேதி விற்பனைக்கு வருகிறது இந்த புதிய போன். தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.4000 கேஷ்பேக் கிடைக்கும். அதேபோல் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








