Home
Mobile

போடு சக்கை.. 50எம்பி கேமரா.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. கம்மி விலையில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது TUV Rheinland இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே ஒப்போ ஏ79 5ஜி போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. கம்மி விலையில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் கலர்ஓஎஸ் 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் முழு விவரங்களைக் கூடிய விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ2 ப்ரோ (OPPO A2 Pro) ஸ்மாரட்போனை இப்போது பார்ப்போம். அதாவது ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் கர்வ்டு (AMOLED curved) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

டைமன்சிட்டி 7050 6என்எம் பிராசரஸ் (Dimensity 7050 6nm processor) கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு கலர்ஓஎஸ் 13.1 ( ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு விரைவாக ஒப்போ ஏ2 ப்ரோ போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. கம்மி விலையில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு என ஐபி54 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) கொண்டுள்ளது ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன்.

பிளாக், டெசர்ட் பிரவுன், Twilight நிறங்களில் ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,820). 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A79 5G camera, battery and more features leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X