ஒரே போடு.. ஆர்டர் அள்ளுது.. ரூ.15,999 போதும்.. 16GB ரேம், 50MP கேமரா.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.15,000 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 5,000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் ஓப்போ ஏ78 (Oppo A78) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முழு அம்சங்கள், ஆஃபர் விவரங்கள் இதோ.
ஓப்போ ஏ78 அம்சங்கள் (Oppo A78 Specifications): இந்த ஓப்போ ஏ78 போனில் 6.43 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஓப்போ ஏ78 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் விர்ச்சுல் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போட்ராய்டு லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ ஏ78 போனில் பிரம்மாண்ட அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி இருக்கிறது.
இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. மேலும், டூயல் நானோ சிம் போர்ட் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், இன் - டிஸ்பிளே மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் மொத்த எடை 180 கிராம் இருக்கிறது.
இந்த ஓப்போ போன் மிஸ்டி பிளாக் (Misty Black) மற்றும் அக்வா கிரீன் (Aqua Green) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.17,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட்டில் (Flipkart) கிடைக்கிறது. அதேபோல, நாடு முழுவதும் உள்ள மெயின்லைன் ரீடெயில் அவுட்லெட் விற்பனையகங்களில் வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த போனுக்கு அறிமுக சலுகையாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், மெயின்லைன் ரீடெயில் அவுட்லெட் விற்பனையகங்களில் எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி கார்டுகளுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. அதேபோல பிளிப்கார்ட்டில் ரூ.1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.15,999க்கு இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும்.
இவ்வளவு மலிவான விலையில் நல்ல பேட்டரி பேக்கப், அசத்தலான சிப்செட் கொண்ட போன் வருவதால் நல்ல வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








