ஒப்போ ஏ78 ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்: ஒரு குறையும் இல்லாத ஆல்-ரவுண்டர் என்டர்டெய்னர்!

மிட்-ரேஞ்ச் பிரிவானது ஒப்போ நிறுவனத்தின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது, இப்பிரிவில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டின் திறமையை நிரூபித்துள்ளன, அவைகள் தனித்துவமான, கண்ணை கவரும் வடிவமைப்புகளில் சிறந்த செயல்திறனையும் வழங்கும் ஸ்மார்ட்போன்களாக உள்ளன. புதிய ஒப்போ ஏ78 அதற்கு சற்றும் குறைந்ததல்ல மற்றும் நிறுவனத்தின் சாதனைக்கான சிறந்த எடுத்துக்காட்டும் கூட!
ஒப்போ ஏ78 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,499 என்கிற விலையில், அதிவேகமான ஆடியோ-விஷுவல் அனுபவம், வலுவான செயல்திறன், நீண்ட கால பேட்டரி மற்றும் ஒரு சிறந்த ட்ரிபிள் கேமரா அமைப்பு ஆகியவற்றுடன் ஒரு அட்டகாசமான வடிவமைப்பைக்யும் கொண்டுவருகிறது. அதிலும் இதன் மிக முக்கியமான சிறப்பம்சமான இதன் துடிப்பான அமோஎல்இடி டிஸ்பிளேவானது ஒப்போ78 ஸ்மார்ட்போனை இந்த பிரிவில் பொழுதுபோக்கின் ஒரு ராஜாவாக ஆக்குகிறது. இதோ எங்கள் பர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்:

கண்களுக்கு விருந்தளிக்கும்!
ஒப்போ 78 ஆனது எப்எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.4-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்பிளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதன் விளைவாக, அனைத்து ஓடிடி பயன்பாடுகளிலும் உங்களுக்கு பிடித்தமான கன்டென்ட் உடன் உங்களை ஒன்றிணைக்கும் தெளிவான, அதிவேகமான காட்சி அனுபவம் உறுதி செய்யப்படுகிறது. ஒப்போ ஏ78 வைட்வைன் எல்1 சான்றிதழுடன் வருகிறது, எனவே இது நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் மற்றும் பல முக்கிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து உயர் வரையறை வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது.
மேலும் ஒப்போ ஏ78 ஆனது அதிக பிரகாசமாகவும் உள்ளது, இதன் திரையில் உள்ள கன்டென்ட்டை நேரடி சூரிய ஒளியில் கூட எளிதாக காண முடிகிறது. உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வெளி இடங்களில் இருந்து பார்ப்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது. இது வழங்கும் விஷுவல் ட்ரீட் உடன் சேர்த்து ஒரு ஜோடி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ரியல் ஒரிஜினல் சவுண்ட் டெக்னாலஜியுடன் கூடிய ரிச் ஆடியோ மூலம் நிரப்பப்படுகிறது, இது 200% வரை செல்லும் அதன் அல்ட்ரா வால்யூம் பயன்முறைக்காக டைரக்கால் சோதிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் திரைப்படங்களைப் பார்த்து மகிழ நீங்கள் இயர்போன்களை பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது.

நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கிடைக்கும்!
நாள் முழுவதும் பொழுதுபோக்கிற்காக அனைத்து அம்சங்களையும் இந்த போனில் பயன்படுத்த முடியும். அதற்குத் தகுந்த பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த அட்டகாசமான ஒப்போ ஏ78 ஸ்மார்ட்போன். அதாவது இந்த ஒப்போ 78 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனை ஆய்வு செய்தபோது 30 மணி நேரம் போன் கால் அல்லது 658 மணி நேர விமான பயணத்திற்கு பேட்டரி போதுமானதாக இருக்கிறது. பின்பு இந்த போனில் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியைப் பதிவிறக்கம் செய்து, பயணத்தின்போது பல மணிநேர பொழுதுபோக்கை அனுபவிக்க முடியும். குறிப்பாக இதன் பேட்டரி திறன் ஒருபோதும் குறைவடையாமல் இருப்பதை உறுதிசெய்கிறது ஒப்போ
நிறுவனம். உங்களுக்குப் பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்த போனில் எளிமையாகப் பார்க்க முடியும்.
ஒருவேளை உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது பேட்டரி தீர்ந்துவிட்டால் ஒப்போ 78 ஆனது வேகமான 67 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த அதிவேக சார்ஜர் மூலம் 30 நிமிடங்களில் 73 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 45 நிமிடங்களில் முழு சாரஜ் ஆகும். இதன் 5 நிமிட சார்ஜிங் உதவியுடன் ஒரு படத்தையே பார்த்துவிட முடியும் என நிறுவனம் கூறுகிறது.
அதேபோல் இதில் புதுமையான பேட்டரி ஹெல்த் இன்ஜின் மூலம் பேட்டரி ஆயுள் உறுதிசெய்யப்படுகிறது. இது ஆயுட்காலத்தை 1,600 சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சிகள் வரை நீட்டிக்கிறது, இது தோராயமாக நான்கு ஆண்டுகள் ஆகும். மேலும் இது நாள் முழுவதும் புத்திசாலித்தனமான சார்ஜிங்கிற்கும் உகந்ததாக இது உள்ளது. அதாவது வேலைக்குச் சென்று நாள் முழுவதும் சார்ஜில் மொபைலை சார்ஜ் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்குத் தகுந்தபடி 80 சதவீதம் சார்ஜ் செய்து அதை நிறுத்திவிடும், சதவீதம் நீங்கள் வெளியேறத் தயாராகும் முன் மீதியை முடித்துவிடும்.
குறிப்பாக சார்ஜ் செய்யும் போது பாதுகாப்பை உறுதி செய்யும் 5 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். அடாப்டர் ஓவர்லோட், ஃபிளாஷ் சார்ஜ் நிலை அடையாளம், சார்ஜிங் போர்ட், பேட்டரி கரண்ட்ஃவோல்டேஜ் ஓவர்லோட் மற்றும் பேட்டரி ஃப்யூஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். குறிப்பாக இந்த போன் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

தனித்துவமான கண்கவர் டிசைன்!
புதிய ஒப்போ ஏ78 ஸ்மார்ட்போன் மிரட்டலான 2 வண்ண விருப்பங்களில் வருகிறது. இது அக்வா க்ரீன் மற்றும் மிஸ்ட் பிளாக் நிறங்களில் தனித்துவமான வடிவமைப்புடன் வருகிறது. இதில் அக்வா க்ரீன் வேரியண்ட் சாதனம் டைமண்ட் மேட்ரிக்ஸ் டிஸைனுடன் வாட்டர் க்ரீன் பேஸ் லேயரை கொண்டுள்ளது. மறுபுறம், மிஸ்ட் பிளாக் வேரியண்ட் சிறிய எல்லோவ் க்ரீன் நுணுக்கத்துடன் மெட்டாலிக் கிளாஸ் டிசைனை கொண்டுள்ளது.
இந்த புதிய ஒப்போ ஏ78 சாதனத்தின் கேமரா மாட்யுளை சுற்றி நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், அங்கும் தனித்துவமான ரன்வே டிசைனை உங்களால் பார்க்க முடியும். இது ஒப்போ ஏ78 போனின் கேமராவிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. போனின் பக்கவாட்டில் மற்றும் நடுவில் இருக்கும் பிரேம்கள் சி-ஆங்கிள் கிரிப் உடன் வருகிறது.
இந்த போனின் பாடி அல்ட்ரா ஸ்லிம் 2.5டி மெல்லிசான எட்ஜ் உடன் மிகவும் ஒல்லியான தோற்றத்தை போனிற்கு வழங்கி, இதற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது. இந்த சாதனம் வெறும் 180 கிராம் எடையுடன் 7.9மிமி தடிமனுடன் வருகிறது. இதன் வடிவமைப்பு உண்மையில் உங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இதன் தனித்துவமான வடிவமைப்பு உங்கள் கைகளுக்கும் இந்த போனை மிகவும் கம்போர்ட் சாதனமாக மாற்றுகிறது. நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் உங்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாது. குறிப்பாக, ஒப்போ இந்த போன்களில் உள்ள பேசல்களை முடிந்த வரை குறைத்து, பயனருக்கான ஸ்க்ரீன் அனுபவத்தை பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்போன் ஜாக் கூட மிகவும் சரியான இடத்தில் ஸ்கிரீனை மறைக்காமல் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஒப்போ ஏ78 சாதனம் ஐபி54 வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது.

இது விலாக்கர்களுக்கானது!
இந்த ஓப்போ ஏ78 ஆனது, 50எம்பி பிரைமரி கேமரா உடன் பொக்கே போர்ட்ராய்டுக்காக 2 எம்பி டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 8எம்பி செல்பி ஷூட்டரானது, டூயல்-வியூ வீடியோ சப்போர்ட்டுடன் வருகிறது. செல்பி மற்றும் பேக் கேமராக்கள் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் ஷூட் செய்ய முடியும். இந்த சிங்கிள் ஹேண்ட்லி அம்சம் யூடியூபர்களுக்கும், விலாக்கர்களுக்கும் தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் படம்பிடிக்கும், அதேவேளையில் அவர்களின் சொந்த ரியாக்ஷன்களையும் வர்ணனைகளையும் கொடுக்க பொருத்தமானதாக இருக்கும். இந்த கேமரா மூலம் எங்களது, ஆழ்மன யூடியூபரை வெளியே கொண்டு வருவதில் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த ஓப்போ ஏ78 ஆனது, போர்ட்ராய்ட் ஷூட்டுக்கு சிறந்தது. பொக்கே ஃபிளேர் போர்ட்ரெய்ட், ஏஐ போர்ட்ரெய்ட் ரீடூச்சிங், ஃப்ளாஷ் ஸ்னாப்ஷாட் மற்றும் அல்ட்ரா-கிளியர் 108 எம்பி மோட் மூலம் அனைத்து சிறிய டிடெயில்களையும் போர்ட்ரெய்ட்களில் கேப்சர் செய்ய கேமரா அம்சங்களை பேக் செய்கிறது.
எச்டிஆர் அல்காரிதம் மூலம் செல்பிக்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது, போர்ட்ரெய்ட் மோட் வாயிலாக ரியலிசமான செல்பிக்கள், விவிட் கலர்கள், நேச்சுரல் ஸ்கின் டோன்கள் மற்றும் லைஃப்-லைக் டெக்ஸருடன் உங்களது செல்பிக்கள் கொடுக்கப்படும்.
மாறுபட்ட சந்தைகளின் போர்ட்ரெய்ட் போட்டோகிராபிக்காகவும், உள்ளூர் சுவைகள் மற்றும் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்காகவும், பயனர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக ஓப்போ நிறுவனம் கூறுகிறது. இந்த முடிவுகள் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு பர்சனலைஸ்டு செய்யப்பட்டுள்ளன.

பட்டர்-ஸ்மூத் பெர்பார்மென்ஸ்!
இந்த ஓப்போ ஏ78 ஆனது, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 680 கொண்டுள்ளது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 1டிபி கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்குகிறது. ஒப்போவின் ரேம் எக்பென்ஷன் டெக்னாலஜி மூலம் 8ஜிபி ரேமை கூடுதலாக விரிவாக்கலாம். இது கூடுதலாக ஆப்களை பேக்கிரவுண்டில் திறக்கவும், கேமிங் பர்பாமென்ஸை மேம்படுத்தவும் உதவுகிறது. ஓப்போவின் டைனமிக் கம்ப்யூட்டிங் எஞ்சின் பேக்கிரவுண்டில் 19 ஆப்களை வரை திறந்து வைத்திருக்கவும், ஆப்களை திறக்கும் வேகத்தை 1.42% அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஹை-எண்ட் ஓப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே பிராபிரீடரி தொழில்நுட்பமாகும். இது யூஎக்ஸ் எவ்வளவு ஸ்மூத் என்பது குறித்த நியாயமான சிந்தனையை உங்களுக்கு வழங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்மூத் அனுபவத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கும் வகையில் சோதனை செய்யப்படுகிறது. ஆகவே, நீங்கள் இணையத்தில் பிரவுசிங் செய்தாலும், யூடியூபில் வீடியோக்களைப் பார்த்தாலும், பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளைப் கண்டு கொண்டிருந்தாலும், லாங் டெர்ம் ப்ளுயிட், லாக் ப்ரீ பர்பாமென்ஸ் வழங்கும். அதோடு 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன், ஓப்போ ஏ78 போனானது, உங்கள் எல்லா பொழுதுபோக்குகளையும் ஃபுல் எச்டி ரெசொலூஷனில் வைக்க கிளியரிங் ஸ்பேஸ் கவலையில்லாமல் போதுமான இடத்தை வழங்குகிறது.
அதற்கும் மேல் ஓப்போ ஏ78 போனானது, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 13.1 உடன் அதிகப்படியான செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருகிறது. ஏ78 ஆனது ஆட்டோ பிக்சலேட் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது உங்களது சாட் ஸ்கிரீன்ஷாட்களில் உள்ள சுயவிவரப் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் போன்ற முக்கியமான தகவல்களை ஒரேவொரு கிளிக்கில் தானே அடையாளம் கண்டு பிக்சலேட் செய்துவிடுகிறது. 105 மொழிகளில் இருந்து ஒரே கிளிக்கில் முழுத் திரைகளையும் மொழிபெயர்க்க, கூகுள் லென்ஸுடன் கட்டமைக்கப்பட்ட ஸ்கிரீன் டிரான்ஸ்லேசன் கொண்டுள்ளது. போட்டோ பேஸ்ட் டெக்ஸ்ட்களிலும் பயன்படுத்தலாம்.

ஃபைனல் இம்ப்ரெஷன்!
அனைத்து சலுகைகள் உடன், ஓப்போ ஏ78 ஆனது, அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோனைப் போல் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இந்த செக்மெண்ட்டில் நாம் பார்த்ததில் பிரகாசம் கொண்டதாகும். அதோடு உங்கள் பாக்கெட்டில் ஒரு தியேட்டர் அனுபவத்திற்கு, பொருந்தக்கூடிய ஆடியோ தரமும் வருகிறது. இதன் அமோலெட் டிஸ்பிளே, ஸ்லிம் பெசல்கள், இன்கிரிடிபில் ஸ்பீக்கர்கள் ஆகியவை சேர்ந்து இந்த பிரிவில் சிறந்த ஆல்ரவுண்ட் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகின்றன. பவர்புல் இன்டர்னல் ஹார்ட்வேர் மற்றும் ஓப்போவின் சாப்ட்வேர் மேஜிக்கல் இது சீராக செயல்படுகிறது. அதோடு, வேகமான 67வாட் சூப்பர்வூக்டிஎம் ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரியின் டேங்க் காரணமாக பேட்டரி பற்றிய கவலை கிடையாது. சீராக இயங்குவது மட்டுமல்லாமல், சுற்றியிருப்பவர்கள் பார்க்கும் வகையில் போன்களை தேடும் எவருக்கும் இது எளிதான பரிந்துரையாக இருக்கும்.

விலை, அவைலபிலிட்டி மற்றும் சலுகைகள்!
ஓப்போ ஏ78 போனின் விலை ரூ.17,499ஆக உள்ளது. ஏற்கனவே, ஓப்போ ஸ்டோர், பிளிப்கார்ட், மற்றும் மெயின்லைன் ரீடெயிலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு கீழே குறிப்பிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான சலுகைகளையும் நீங்கள் பெறமுடியும்.
வாடிக்கையாளர்கள், மெயின்லைன் ரீடெயிலர்கள் மூலம் 10 சதவீதம் (ரூ.1500) வரை கேஷ்பேக் பெறலாம். எஸ்பிஐ கார்டுகள், கோடக் மஹிந்திரா பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஒன் கார்டு போன்ற முன்னணி வங்கிகளில் மூலம் 3 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ பெறலாம். அதோடு வாடிக்கையாளர்கள் முன்னணி நிதியாளர்களிடமிருந்து கவர்ச்சிகரமான இஎம்ஐ திட்டங்களையும் பெறமுடியும் முடியும்.
பிளிப்கார்டில் மூலம் ரூ.1500 உடனடி தள்ளுபடி மற்றும் 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ, முன்னணி வாங்கி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஓப்போ வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்தும் ரூ.500 வரை எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications








