கொத்தா தூக்குவீங்க.. ரூ.17,499க்கு 16GB ரேம்.. 50MP கேமரா.. 67W சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த போன்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே வியந்துபோகும் வகையில், மலிவான பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி என்று பட்டையை கிளப்பும் ஓப்போ ஏ78 (Oppo A78) போனின் வெளியீட்டு தேதி விவரங்கள் கசிந்துள்ளன.
இவ்வளவு மலிவான விலைக்கு இந்த ஓப்போ போன் கிடைப்பதால், விற்பனையில் சக்கைபோடு போடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போன் முதலில் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும், அதன்பின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு.

ஓப்போ ஏ78 4ஜி அம்சங்கள் (Oppo A78 4G Specifications): இந்த ஓப்போ போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி இருக்கிறது. மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ ஏ78 போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பட்டாசான அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டைப் - சி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் 5.3, 3 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. அதோடு IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது. இந்த போன் ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால் 180 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.
பிளாக் மிஸ்ட் (Black Mist), சிகிரீன் (Sea Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விற்பனை ஏற்கனவே, இந்தோனிஷியாவில் தொடங்கிவிட்டது. அங்கு, இந்த போனின் விலை ரூ.18,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றதால், இந்தியாவில் அறிமுகம் செய்ய ஓப்போ நிறுவனம் திட்டமிட்டது.
இந்த நேரத்தில் அந்த போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவலின் அடிப்படையில், ஓப்போ ஏ78 போன் ஜூலை மாத இறுதியில் இருந்து ஆஃப் லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்றும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்றும் தெரியவருகிறது.
இந்தியாவில் மிஸ்டி பிளாக் (Misty Black) மற்றும் அக்வா கிரீன் (Aqua Green) ஆகிய 2 கலர்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த போன் ரூ.17,499 பட்ஜெட்டில் வெளியாகயிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இந்த போனின் 5ஜி வெர்ஷன் ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கிறது.
ஆனால், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மட்டுமே கிடைப்பதால், 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








