Home
Mobile

ப்ப்பா, வேற மாதிரி லுக்! டிசைன் தூக்கல்! ஆனால், பட்ஜெட் விலை! எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் பட்ஜெட் விலையில் பட்டாசான டிசைன் மற்றும் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், அவர்களுக்கு பக்காவான சாய்ஸாக ஓப்போ ஏ78 4ஜி (Oppo A78 4G) மாடல் இருக்கும். இந்த போனின் முழு அம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஓப்போ போன்களின் வரும் கலர்ஓஎஸ் (ColorOS) மற்றும் கேமரா அம்சங்கள் சற்று வித்தியாசமாகவும் அதே நேரத்தில் அட்டகாசமாகவும் இருக்கும். இதனாலேயே அந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த பட்டியலில் பட்டையை கிளப்பும் டிசைனும் இடம்பிடித்துள்ளது. ஆம், இப்போது வரும் ஓப்போ போன்களின் டிசைன்களே அதன் யூசர்களை எளிதாக கவர்ந்து விடுகிறது.

ப்ப்பா, வேற மாதிரி லுக்! டிசைன் தூக்கல்! ஆனா, பட்ஜெட் விலை! எந்த போன்?

அந்த வரிசையில், ஓப்போ ஏ78 4ஜி போன், டிசைனுக்காக மட்டுமே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. இந்த போன் 4ஜி மட்டுமே கொண்டுள்ளதால், மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனால், விற்பனை கூடுதலாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போனின் மற்ற அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஓப்போ ஏ78 அம்சங்கள் (Oppo A78 4G Specifications): இந்த ஓப்போ போன் 6.43 இன்ச் (2400×1080 பிக்சல்ஸ்) பிளாட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் வருகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஓப்போ ஏ78 போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது. இந்த போன் ஸ்லிம் டிசைனில் உருவாக்கப்பட்டிருப்பதால், 180 கிராம் எடைக் கொண்டுள்ளது.

டைப் - டி போர்ட், ப்ளூடூத் 5.0, வை-பை 5 உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. முன்னதாக, ஓப்போ ஏ78 5ஜி போன் வெளியாகி விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 (MediaTek Dimensity 700) சிப்செட் கொடுக்கப்பட்டிருந்தும் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது. அதைவைத்து பார்க்கும்போது, இந்த ஓப்போ ஏ78 4ஜி போன் ரூ.10,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போன் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, கசிந்துள்ள போட்டோக்கள் மூலம், மிஸ்டி பிளாக் (Misty Black) மற்றும் அக்வா கிரீன் (Aqua Green) ஆகிய 2 கலர்களில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அக்வா கிரீன் கலர் வேரியண்ட் பார்ப்பதற்கே பிரீமியம் லூக்கை கொடுக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A78 4G Specifications Leaked, Here is Expected Price, Launch Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X