Home
Mobile

தூக்கி பாக்கெட்டுல போடலாம்.. ரூ.17,499க்கு 16GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்.. யாரு விடுவா?

பட்ஜெட் விலையில் 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி போததற்கு 16 ஜிபி ரேம் என்று மிட்-ரேன்ஞ் அம்சங்களுடன் ஓப்போ ஏ78 (Oppo A78) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓப்போ ஏ78 அம்சங்கள் (Oppo A78 Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.17,499க்கு ரூ. 50MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த ஓப்போ ஏ78 போனில் 6.43 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனில் விர்ச்சுல் ரேம் வசதி இருக்கிறது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஓப்போ ஏ78 போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போது போனில் அட்டகாசமான அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

அதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டூயல் நானோ சிம் போர்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.3, 3 மிமீ ஆடியோ ஜாக், IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த போனின் எடை 180 கிராம் மட்டுமே இருக்கிறது.

இந்த போனின் விற்பனை இந்தோனிஷியாவில் முன்னதாகவே, தொடங்கிவிட்டது. அங்கு, இந்த போன் பிளாக் மிஸ்ட் (Black Mist), சீ கிரீன் (Sea Green) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் இந்த ஓப்போ ஏ78 போனின் விலை ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஓப்போ ஏ78 போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் கசிந்தன. அந்த தகவலின் படி, ஓப்போ ஏ78 போன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் அதன்பின் விற்பனைக்கு வரும் என்பதும் தெரியவந்தது. ஆனால், இப்போது, ஓப்போ நிறுவனமே அந்த போன் வெளியாகும் தகவலை உறுதி செய்துள்ளது.

இதனால், இந்த வாரத்துக்குள் ஓப்போ ஏ78 போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மிஸ்டி பிளாக் (Misty Black) மற்றும் அக்வா கிரீன் (Aqua Green) ஆகிய 2 கலர்களில் ஓப்போ ஏ78 போன் வெளியாகிறது. அதேபோல ரூ.17,499 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

மிகவும் மலிவான விலையில் நல்ல பேட்டரி பேக்கப், சிறந்த சிப்செட் கொண்ட போன் வாங்க விரும்பினால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A78 4G Phone Under 20000 With 16GB RAM, 5000mAh Battery, Price, Specifications, Launch Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X