Home
Mobile

இவ்ளோ தானா? பட்ஜெட்டில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 16GB ரேம்.. 256GB மெமரி.. செதுக்கி வெச்ச டிசைன் வேற!

ஓப்போ (Oppo) நிறுவனத்தின் ஓப்போ ஏ 78 (Oppo A78) போன் பட்ஜெட் விலையில், 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என்று ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஓப்போ ஏ78 5ஜி (Oppo A78 5G) போன், ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், ரேம், ஸ்டோரேஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி குறைவாக கொடுக்கப்பட்டதால், அந்த பிராண்ட் பிரியர்கள் அப்டேட்டட் வெர்ஷனை கேட்டுவந்தனர். அண்மையில், அதுபோன்ற அப்டேட்டட் வெர்ஷன் குறித்த தகவல்கள் கசிந்தன. இப்போது, அந்த போன் பட்டாசான அம்சங்களுடன் வெளியாகிவிட்டது.

இவ்ளோ தானா? பட்ஜெட்டில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்! 16GB ரேம், 256GB மெமரி!

ஓப்போ ஏ78 4ஜி அம்சங்கள் (Oppo A78 4G Specifications): இந்த போன் 6.43 இன்ச் (1080x2400) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) உடன் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Snapdragon 680 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.

டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 180 கிராம் மட்டும் எடைக்கொண்டுள்ளது.

IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில், இந்தோனிஷியாவில் பிளாக் மிஸ்ட் (Black Mist), சிகிரீன் (Sea Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலையைப் பொறுத்தவரையில், ரூ.20,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த போனின் 5ஜி வெர்ஷன் விலையே இந்தியாவில் ரூ.18,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால், 5ஜி வெர்ஷனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்போது கூடுதல் அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் 5ஜி வெர்ஷனுடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மிஸ்டி பிளாக் (Misty Black) மற்றும் அக்வா கிரீன் (Aqua Green) ஆகிய 2 கலர்களில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது என்று தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் விலை, இந்தியாவில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும். இந்த மாத இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A78 4G Launched With 67W SuperVOOC Charging Here is Price, Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X