16எம்பி செல்பீ கேம் உடன் சான்றிதழ் வலைத்தளத்தில் சிக்கிய ஒப்போ ஏ77டி.!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3115எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒப்போ ஏ77டி ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்

|

ஒப்போ ஏ77டி எனப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஒன்று சீன சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ-வில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலானது மொபைலின் படங்களை மட்டுமின்றி வரவிருக்கும் சாதனத்தின் விரிவான குறிப்பையும் இது கொண்டுள்ளது.

டிஇஎன்ஏஏ பட்டியலின் படி, ஓப்போ ஏ77டி ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்) டிஸ்பிளே மற்றும் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு, ஒரு மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் மேலும் 128ஜிபி மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3115எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒப்போ ஏ77டி ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

செல்பீ மட்டம் வீடியோ அழைப்புகளுக்காக ஒப்போ 16 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. தவிர, இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

கிராவிட்டி, டிஸ்டன்ஸ், லைட்

கிராவிட்டி, டிஸ்டன்ஸ், லைட்

அளவீட்டில் இந்த கைபேசி 153.3 x 75.9 x 7.4 மிமீ மற்றும் 148 கிராம் எடையும் கொண்டுள்ளது. பட்டியலின் படி, இந்த தொலைபேசியில் கிராவிட்டி, டிஸ்டன்ஸ், லைட் ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது.

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

தங்கம், கோல்ட் றோஸ் மற்றும் கருப்பு ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் ஒப்போ தைவான் நாட்டில் அறிமுமாகும்ம் செய்த ஏ77 ஸ்மார்ட்போனின் அப்டேட் மாறுபாடாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

சுமார் ரூ.23,414/-க்கு அறிமுகமான அந்த சாதனம் ஒரு உலோக யூனபாடி வடிவமைப்புடன் ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080 x 1280 பிக்சல்) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஒரு மீடியா டெக் எம்டி6750டி ஆக்டா-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயங்கும் இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்க ஆதரவும் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷல்லோ கலர்ஓஎஸ் 3.0 இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 3200எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

16 மெகாபிக்சல்

16 மெகாபிக்சல்

ஹோம் பொத்தானில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. கேமரா துறையை பொறுத்தமட்டில் எப் / 2.2 துளை, பிடிஏஎப், எல்இடி பிளாஷ் மற்றும் பியூட்டிப்பை 4.0 மற்றும் போர்ட்ரெய்ட் முறை கொண்ட 13 எம்பி ரியர் கேமராவும், எப் / 2.0 துளை கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ஸ்மார்ட்போன் கலப்பின இரட்டை சிம் ஆதரவு, 4ஜி, வைஃபை, ப்ளூடூத், மற்றும் ஜிபிஎஸ் ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 7.3 மிமீ தடிமன் மற்றும் 153கிராம் எடை கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Oppo A77T with 16MP front camera gets TENAA certification. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X