Oppo கம்மிங் ஒத்து.. மொத்த தேவையும் பூர்த்தி செய்யும் தரமான ஸ்மார்ட்போன்! சரியான விலை..

|

Oppo நிறுவனம் Oppo A77s என்ற மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் சன்செட் ஆரஞ்ச் மற்றும் ஸ்டாரி பளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Oppo A77s அறிமுகம்

Oppo A77s அறிமுகம்

Oppo A77s ஸ்மார்ட்போனானது மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி ஆதரவுடன் 8 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது.

நியாயமான ஆதரவுடனான 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அக்டோபர் 7 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oppo A77s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A77s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A77s ஆனது இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாகும். ஒப்போ ஏ77எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியாகி இருக்கிறது. இதன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும்.

சன்செட் ஆரஞ்ச் மற்றும் ஸ்டாரி என்ற இரண்டு வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

10 சதவீத கேஷ்பேக் சலுகை

10 சதவீத கேஷ்பேக் சலுகை

Oppo A77s ஸ்மார்ட்போனை 10 சதவீத கேஷ்பேக் சலுகை உடன் வாங்கலாம். இதற்கு தகுதியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் குறித்த விவரத்தை விற்பனையின் போது நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo A77s சிறப்பம்சங்கள்

Oppo A77s சிறப்பம்சங்கள்

Oppo A77s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயங்கும். இதில் டூயல் நானோ சிம் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் எச்டி+ (720x1,612 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது. மிட் ரேன்ஜ் விலைக்கேற்ற பக்கா சிப்செட் இதுவாகும்.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

Oppo A77s ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமராவும் 2 எம்பி மோனோக்ரோ் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மெமரி விரிவாக்க வசதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது. இதன்மூலம் மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

இணைப்பு ஆதரவுகளாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வெர்ஷன் 5.0, யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவைகள் இருக்கிறது.

33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங்

33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங்

Oppo A77s ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெற்றுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

மிட் ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்..

மிட் ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்..

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போனில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சமும் இருக்கிறது. நீங்கள் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ஒப்போ ஏ77எஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. சமீபத்திய மேம்பட்ட அம்சங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A77s Launched in India With 8GB RAM, 5000mAh Battery: Price, Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X