வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கும் OPPO A77 போன்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ நிறுவனம்.

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

இந்நிலையில் புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.மேலும் இணையதளத்தில் கசிந்த இந்த ஒப்போ ஏ77 ஸமார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கூகிள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் வேலை இது தான்.. 'பிராஜெக்ட் ஐரிஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு?கூகிள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் வேலை இது தான்.. 'பிராஜெக்ட் ஐரிஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு?

மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் பே மூலம் ஈஸியா Jio, Airtel, Vi, BSNL ரீசார்ஜ் செய்வது எப்படி? ரிவார்டு கூட இருக்கு மிஸ் பண்ணாதீங்க..கூகிள் பே மூலம் ஈஸியா Jio, Airtel, Vi, BSNL ரீசார்ஜ் செய்வது எப்படி? ரிவார்டு கூட இருக்கு மிஸ் பண்ணாதீங்க..

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இந்த ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாகப் பயன்படும். பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய கண்டம் ஆப்பரிகாவுடன் இணையுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட உண்மை ரிப்போர்ட்!இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய கண்டம் ஆப்பரிகாவுடன் இணையுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட உண்மை ரிப்போர்ட்!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவரும் ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்செட் ஆரஞ்சு மற்றும் ஸ்கை ப்ளூ

அதேபோல் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ், ரியல்மி 9 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் இந்தியாவில் களமிறங்கும். குறிப்பாக சன்செட் ஆரஞ்சு மற்றும் ஸ்கை ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

 ஒப்போ K10 Vitality Edition

ஒப்போ K10 Vitality Edition

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ K10 Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ஒப்போ K10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEOஎன்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் நீங்கள் நினைத்த ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.

 சூப்பர் கேமரா

சூப்பர் கேமரா

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் விலை CNY 2,199(இந்திய மதிப்பில் ரூ.25,900) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A77 smartphone will be launched in the first week of August: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X