Home
Mobile

48எம்பி கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் புதிய ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனை தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனில்

ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,612 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது.

ஒப்போ ஏ77 5ஜி

அதேபோல் இந்த ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன்.

சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த

இந்த புதிய சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் போன்ற வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக பயன்படும். பின்பு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ColorOS 12.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

பு மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூநிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார், ஆப்டிகல் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃ

புதிய ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11 ஏசி/ஏ/பி/ஜி/என்/, புளூடூத் வி5.3, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன்.
மேலும் இந்த புதிய சாதனத்தின் விலை THB 9,999 (இந்திய மதிப்பில் ரூ.22,500) ஆக உள்ளது.

அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo A77 5G With MediaTek Dimensity 810 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X